icc t20 team of the year 2024
icc t20 team of the year 2024PT

’Team-ஐ பார்த்தாலே அதிருதே..’ ரோகித் தலைமையில் தரமான டி20 அணியை அறிவித்த ஐசிசி!

2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டி20 அணியில் ரோகித் சர்மா, டிராவிஸ் ஹெட், நிக்கோலஸ் பூரன், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் முதலிய ஸ்டார் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Published on

2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சுழற்சி அட்டவணை துவங்கிவிட்டது. இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியையும், பெண்களுக்கான சிறந்த ஒருநாள் அணியையும் ஐசிசி நேற்று வெளியிட்டது.

அந்தவகையில், இன்று 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் டி20 அணியை வெளியிட்டுள்ளது. ஐசிசி 2024 ஒருநாள் அணிக்கு சரித் அசலங்கா, டெஸ்ட் அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டன்களாக பெயரிடப்பட்ட நிலையில், ஐசிசி 2024 டி20 அணிக்கு உலகக்கோப்பை வென்ற ரோகித் சர்மா கேப்டனாக பெயரிடப்பட்டுள்ளார்.

icc t20 team of the year 2024
இந்திய வீரர் ஒருவர் கூட இல்லை.. 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ODI, TEST அணியை வெளியிட்ட ஐசிசி!

ரோகித் தலைமையில் தரமான டி20 அணி..

ஐசிசியின் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியில் இந்தியாவிலிருந்து ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் முதலிய 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவிலிருந்து டிராவிஸ் ஹெட்டும், இங்கிலாந்திலிருந்து பிலிப் சால்ட்டும், வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நிக்கோலஸ் பூரனும் இடம்பெற்றுள்ளனர்.

rohit sharma
rohit sharma

மற்ற வீரர்களாக பாகிஸ்தானிலிருந்து பாபர் அசாம், ஜிம்பாப்வே சிக்கந்தர் ராசா, இலங்கை வனிந்து ஹசரங்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷீத் கான் முதலியோரும் இடம்பெற்றுள்ளனர்.

2024-ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த டி20 அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), டிராவிஸ் ஹெட், பிலிப் சால்ட், பாபர் அசாம், நிக்கோலஸ் பூரன் (WK), சிக்கந்தர் ராசா, ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், வனிந்து ஹசரங்கா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

icc t20 team of the year 2024
14 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்.. ரஞ்சிப் போட்டியில் சதமடித்த சுப்மன் கில்! விமர்சனத்திற்கு பதிலடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com