முதல் வருமானத்தில் என்ன வாங்கினீர்கள்..? ஜெய்ஸ்வால் கூறிய நெகிழ்ச்சிகரமான பதில்!
வறுமையான குடும்ப சூழலில் இருந்துவந்து தன்னுடைய திறமையால் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடித்திருப்பவர் 23வயது இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பஹோடி என்ற சிற்றூரில் ஹார்டுவேர் கடை வைத்திருக்கும் தந்தைக்கு பிறந்த ஜெய்ஸ்வால், குடும்ப வறுமையின் காரணமாக கிரிக்கெட் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு 10வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார்.
பின்னர் படிப்படியாக முன்னேறிய அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் அடையாளம் காணப்பட்டு ஐபிஎல் தொடரில் ஜொலித்தார். ஐபிஎல்லில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எல்லாம் சிக்சர், பவுண்டரிகளுக்கு விரட்டிய ஜெய்ஸ்வாலை இந்திய அணி ஸ்குவாடில் சேர்த்தது.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஜெய்ஸ்வால் அதிவேக ஆயிரம் ரன்கள் என பல்வேறு சாதனைகளை படைத்து, இந்திய அணியில் தவிர்க்கவே முடியாத இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் பங்கேற்ற ஜெய்ஸ்வால் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது முதல் வருமானம் குறித்து பதிலளித்த ஜெய்ஸ்வால், நெகிழ்ச்சிகரமான பதிலை சொல்லி ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளார்.
ஜெய்ஸ்வாலின் சுவாரசிய பதில்கள்..
Forbes India உடனான நேர்காணலில் பங்கேற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
1. முதல் வருமானத்தில் என்ன வாங்கினீர்கள்?
- அம்மாவிடம் கொடுத்து விட்டேன்.
2. எந்த கிரிக்கெட் வீரர் உங்களுடைய விருப்பமான ரூம்மேட்? என்ன காரணம்?
- துருவ் ஜுரேல், என்னுடைய நண்பர்
3. மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக 4 பவுண்டரிகள் அல்லது ஜிம்மி ஆண்டர்சனுக்கு எதிராக 3 சிக்சர்கள்?
- மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக 4 பவுண்டரிகள்
4. நீங்கள் விளையாடியதிலேயே கடினமான பந்துவீச்சாளர் யார்?
- அப்படி யாரும் இல்லை
5. வேறு எந்த கிரிக்கெட் வீரரின் ஷாட்டை விளையாட விரும்புகிறீர்கள்?
- சச்சின் சார் ஸ்டிரைட் டிரைவ்
6. உங்களுக்கு பிடித்த தி்ரைப்பட நடிகர்?
- கேட் வின்ஸ்லெட்
7. எந்த இசையை தற்போது கேட்கிறீர்கள்?
- நாட்டுப்புற இசை
8. அதிகம் பயன்படுத்தும் மொபைல் ஆப்?
- வாட்ஸ்அப்
9. மற்றவர்களுக்கு தெரியாத உங்களை பற்றிய விசயம்?
- அது ரகசியம்
10. உங்களுடைய மொபைல் லாக் ஸ்க்ரீன் போட்டோ?
- எனக்கு தெரியாது