
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
ஹர்திக் பாண்டியாதான் இந்திய டி20 அணியை கடந்த சில நாட்களாக வழிநடத்தி வந்த சூழலில், இத்தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று கருதப்படுகிறது.
மேலும், தொடர்ந்து 2 மாதங்களாக தொடர்ந்து விளையாடி வரும் பும்ரா, ஜடேஜா, குல்தீப், சுப்மன் கில், சிராஜ் ஆகியோருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆசியப் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்ற ருத்ராஜ் தலைமையிலான இளம் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் களமிறக்கப்படலாம். அதேபோல், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்குப் பதிலாக வி.வி.எஸ். லட்சுமன் தற்காலிகப் பயிற்சியாளராக செயல்படலாம் என்றும் தெரிகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடர் வரும் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.