IPL: Gujarat Titans Defeat Chennai Super Kings by 8 Wickets
Csk VS GtIPL

சென்னைக்கு 5-வது தோல்வி.. 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி.!

சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி.
Published on

ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திவரும் நிலையில், பெஸ்ட் vs பெஸ்ட் என பல அதிரடி போட்டிகளுடன் களைகட்டி வருகிறது 2026 ஐபிஎல்.

அதன்படி, இன்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

Csk VS Gt
Csk VS GtIPL

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்காத நிலையில், சஞ்சு சாம்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். உர்வில் படேல், சர்பராஸ் கான், பிரெவிஸ் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுப்பக்கம் கேப்டன் ருத்துராஜ் நிதானமாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 49 ரன்கள் அரைசதத்தை அவர் கடந்த நிலையில், இது இந்த சீசனில் மெதுவாக அடிக்கப்பட்ட அரைசதமாக இருக்கிறது. 20 ஓவர் முடிவில் சென்னை அணி 158 ரன்கள் குவித்த நிலையில், 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. குஜராத் அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

இந்த நிலையில், 159 ரன்களை இலக்காக கொண்டு குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடினர். சுப்மன் கில் 33 (23) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், நிலைத்து நின்று விளையாடிய சாய் சுதர்சன் 87 (46) ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். தொடர்ந்து வந்த ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார். இறுதியில், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 162 ரன்கள் எடுத்து குஜராத் இலக்கை எட்டியது. இதன்மூலம் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

IPL: Gujarat Titans Defeat Chennai Super Kings by 8 Wickets
முதல் பந்திலேயே கம்மின்ஸை சிக்சர் அடித்த சூர்யவன்ஷி.. புகழ்ந்த பேட் கம்மின்ஸ்! என்ன சொன்னார்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com