ரோகித், ஹர்திக்
ரோகித், ஹர்திக்pt web

IPL 2025 | சென்னைக்கு எதிரான போட்டியில் ஹர்திக் விளையாடத் தடை... என்ன காரணம்?

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா இல்லாமல் களமிறங்கவுள்ளது.
Published on

2025 ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ள பிசிசிஐ தொடருக்கான அட்டவணையை நேற்று வெளியிட்டது. அதாவது, மார்ச் 22-ம் தேதி தொடங்கி, மே 25-ம் தேதிவரை நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி உட்பட மொத்தம் 74 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில், மார்ச் 23-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தங்களுடைய முதல் போட்டியில் சேப்பாக்கத்தில் மோதுகின்றன.

இந்நிலையில், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் முதல் போட்டியில் விளையாடமாட்டார் எனும் சூழலில் ரசிகர்கள் தங்களது வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றன. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக, கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அப்போது ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “2024 மே 17 அன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி ஓவரை சுழற்சி செய்தல் மற்றும் பந்து வீசியதில் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொண்டதால் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரோகித், ஹர்திக்
டெல்லி நிலநடுக்கம்: “முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு..” - மக்கள் வீதிகளில் தஞ்சம்

ஐபிஎல் நடத்தை விதிகளின்கீழ், அவரது அணியின் மூன்றாவது மீறலாக இருந்ததால் கேப்டன் பாண்டியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதமும், அணியின் அடுத்தப்போட்டியில் அவருக்கு விளையாட தடையும் விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாஎக்ஸ் தளம்

இதற்குப் பிறகு, மும்பை எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இதன்காரணமாக, இந்தாண்டு மும்பை அணியின் முதல் போட்டியில், ஹர்திக் பாண்டியா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் 29 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான மும்பை அணியின் இரண்டாவது போட்டியில் ஹர்திக் மீண்டும் கேப்டனாகக் களமிறங்குவார்.

சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித், சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா என மூவரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித், ஹர்திக்
திருவண்ணாமலை | அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர் தமன் சாமி தரிசனம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com