\
India won the India Tour of Afghanistan T20I Series Abhishek Sharma new record in century
india teambcci

டெல்லியில் ரன் மழை.. ஆப்கானை துவம்சம் செய்த அபிஷேக் சர்மா.. ஒரே போட்டியில் 10 சாதனைகள்!

இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் முழுமையாக வென்றது.
Published on

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, இந்திய அணி முழுமையாக வென்று சாதனை படைத்துள்ளது. அதிலும், 3ஆவது போட்டியில் அபிஷேக் சர்மா சதமடித்து சாதனை படைத்தார். தவிர, இந்த ஒரு போட்டியில் மட்டும் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லியில் நடைபெற்றது. இத்தொடரில் இந்திய மண்ணிலேயே இந்திய அணி வெளிநாட்டு அணியாக விளையாடுகிறது. அதாவது, இந்தத் தொடர் டெல்லியில் நடைபெற்றாலும், அதிகாரப்பூர்வமாக ஆப்கானிஸ்தான் அணிதான் போட்டியை நடத்தும் 'ஹோஸ்ட்' அணியாக செயல்படுகிறது. இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், 3ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர்.

இந்தியா
இந்தியாபிசிசிஐ

இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். 35 பந்துகளில் அரைசதம் அடித்து சஞ்சு சாம்சன் வெளியேறிய நிலையில், மறுமுனையில் அபிஷேக் சர்மா, ஆப்கான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் காட்டிய அதிரடியால் 30 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இறுதியில் அவர் 34 பந்துகளில் 9 பவுண்டரி, 11 சிக்ஸருடன் 108 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் 29 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஆப்கான் அணி, 14.1 ஓவர்களில் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் முழுமையாக வென்றது. இந்திய அணி தரப்பில், ரவி பிஷ்னோய் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

India won the India Tour of Afghanistan T20I Series Abhishek Sharma new record in century
IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!

ஒரே போட்டியில் 10 பிரம்மாண்ட சாதனைகள்!

நேற்று நடைபெற்ற இந்த ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன.

1. T20I போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி, மிகப்பெரிய ரன் (127) வித்தியாசத்தில் நேற்று தோல்வி கண்டது.

2. இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மிகக்குறைந்த ரன்னில் (94) சுருண்டது.

3. ஆண்கள் டி20 போட்டிகளில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அதிக முறை வெற்றி பெற்ற அணிகளில் இந்தியாவும், கனடாவும் உள்ளன. இரண்டும் தலா 10 முறை வெற்றிபெற்றுள்ளன.

4. இந்திய வீரர்களால் அனைத்து T20 போட்டிகளிலும் அடிக்கப்பட்ட அதிகபட்ச சதங்கள் பட்டியலில் விராட் கோலியுடன் அபிஷேக் சர்மாவும் இணைந்தார். இருவரும் தலா 10 சதங்கள் அடித்துள்ளனர்.

5. ஆண்களுக்கான T20I போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை அதிக முறை எடுத்த அணிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அது, இந்த ரன்களை 53 தடவை எடுத்துள்ளது.

அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மாபிசிசிஐ

6. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச T20I ரன்னிலும் (221/7) இந்தியா இரண்டாவது இடம்பிடித்தது. முதல் இடத்தில் அயர்லாந்து (225/7) உள்ளது.

7. அனைத்து டி20 போட்டிகளிலும் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் (108) அடித்த இந்திய பேட்டர்கள் வரிசையில் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

8. ஒரு T20I இன்னிங்ஸில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் (13) அடித்த பட்டியலிலும் அபிஷேக் சர்மாவே முதலிடத்தில் உள்ளார்.

9. அதிவேக T20I சதங்கள் (30 பந்துகள்) அடித்த வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மாவே முதலிடத்தில் உள்ளார். (முழு உறுப்பினர் அணிகள்)

10. T20I போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா 3ஆவது இடம்பிடித்தார். முதல் இடத்தில் எஸ்தோனியா வீரர் சாஹில் செளானும் (27 பந்துகள்), இரண்டாவது இடத்தில் துருக்கி வீரர் முகமது ஃபஹத்தும் (29 பந்துகள்) உள்ளனர்.

India won the India Tour of Afghanistan T20I Series Abhishek Sharma new record in century
2வது டி20| முதல் பவுலராக பும்ரா படைத்த வரலாறு.. 4வது உலக வீரராக முகமது நபி சாதனை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com