\
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்bcci

IND vs AFG| சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்.. தொடரை வென்றது இந்தியா!

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 2வது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்திய அணி.
Published on
Summary

டெல்லியில் நடைபெற்ற 2வது டி20யில், ஹோஸ்ட் அணியாக விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் நிதிஷ்குமார் ரெட்டி 3 விக்கெட் எடுத்தார். 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் (22 பந்தில் 57), அபிஷேக் சர்மா (39), இஷான் கிஷன் (38) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 14.5 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லியில் நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய மண்ணிலேயே இந்திய அணி வெளிநாட்டு அணியாக விளையாடுகிறது. அதாவது, இந்தத் தொடர் டெல்லியில் நடைபெற்றாலும், அதிகாரப்பூர்வமாக ஆப்கானிஸ்தான் அணிதான் போட்டியை நடத்தும் 'ஹோஸ்ட்' அணியாக செயல்படுகிறது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், இன்று இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் இப்ராஹிம் ஜத்ரான் 37 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியில் நிதிஷ்குமார் ரெட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

160 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 22 பந்தில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என துவம்சம் செய்த சஞ்சு சாம்சன் 57 ரன்கள் அடித்து மிரட்டினார். அபிஷேக் சர்மா 39 ரன்களும், இஷான் கிஷன் 38 ரன்களும் அடிக்க இந்திய அணி 14.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது இந்திய அணி. 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவிருக்கிறது.

சஞ்சு சாம்சன்
2வது டி20| முதல் பவுலராக பும்ரா படைத்த வரலாறு.. 4வது உலக வீரராக முகமது நபி சாதனை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com