இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணிweb

பிரதிகா 154 ரன்கள், மந்தனா 135 ரன்கள்.. 435 ரன்கள் குவித்த இந்திய அணி..!

அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 435 ரன்களை குவித்து சாதனை படைத்தது இந்திய அணி.
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அயர்லாந்து மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 10 முதல் 15-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் போட்டிகள் ராஜ்கோட்டில் நடைபெற்றுவருகிறது.

jemima maiden century
ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம்cricinfo

முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 2-0 என வென்ற ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான இந்திய அணி, தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்திய மகளிர் அணி
சிறப்பாக விளையாடவில்லை என்றால் சம்பளம் குறைக்கப்படும்.. பிசிசிஐ அதிரடி முடிவு!

அடுத்தடுத்து சதமடித்த தொடக்க வீரர்கள்..

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஸ்மிரிதி மந்தனா மற்றும் பிரதிகா இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் விளையாடிய இந்த ஜோடி 200 ரன்களை கடந்து மிரட்டியது.

ஒருபக்கம் பிரதிகா நிதானமாக விளையாட, மறுமுனையில் 12 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி 70 பந்தில் சதத்தை எடுத்துவந்து அசத்தினார். இதன்மூலம் அதிவேகமாக ஒருநாள் சதமடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிரிதி.

தொடர்ந்து அதிரடியை நிறுத்தாத ஸ்மிரிதி அடுத்த 10 பந்தில் 35 ரன்களை அடிக்க, இந்திய அணியின் போர்டில் ரன்கள் குவிய ஆரம்பித்தது. ஆபத்தாக விளங்கிய மந்தனாவை 135 ரன்னில் வெளியேற்றி பெருமூச்சுவிட்டனர் அயர்லாந்து அணியினர்.

ஸ்மிரிதி வெளியேறினாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரதிகா தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்தது மட்டுமில்லாமல், 154 ரன்கள் அடித்து அசத்தினார். ஸ்மிரிதி 135 ரன்கள், பிரதிகா 154 ரன்கள், ரிச்சா கோஸ் 59 ரன்கள் என்று அசத்த 50 ஓவர் முடிவில் 435 ரன்களை குவித்தது இந்திய அணி.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய 400 ரன்களை கடப்பது இதுவே முதல்முறை, தங்களுடைய அதிகபட்ச ODI டோட்டலாக 435 ரன்களை பதிவுசெய்தது இந்திய அணி.

இந்திய மகளிர் அணி
முதல் சதமடித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்.. 370 ரன்கள் குவித்த இந்தியா.. அயர்லார்ந்தை வீழ்த்தி அசத்தல்!

மகளிர் ODI கிரிக்கெட்டில் அதிகபட்ச டோட்டல்.. 

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மட்டுமே 400 ரன்களுக்கு மேல் அடித்த நிலையில், மூன்றாவது அணியாக இந்திய அணி 400 ரன்களுககு மேலான ரன்களை பதிவுசெய்துள்ளது.

இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி

ODI கிரிக்கெட்டில் அதிகபட்ச டோட்டல்:

  • நியூசிலாந்து - 491/4 vs அயர்லாந்து - 2018

  • நியூசிலாந்து - 455/5 vs பாகிஸ்தான் - 1997

  • நியூசிலாந்து - 440/3 vs அயர்லாந்து - 2018

  • இந்தியா - 435/5 vs அயர்லாந்து - 2025

  • நியூசிலாந்து - 418/10 vs அயர்லாந்து - 2018

  • ஆஸ்திரேலியா - 412/3 vs டென்மார்க் - 1997

இந்திய மகளிர் அணி
‘பாகிஸ்தானுக்கு செல்லும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா..’ வெளியான தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com