சிட்னி டி20 போட்ட்யில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி
சிட்னி டி20 போட்ட்யில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றிcricinfo

முதல் டி20 போட்டி| 4 விக்கெட் வீழ்த்திய அருந்ததி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி!

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியை வென்றது ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணி.
Published on
Summary

சிட்னியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை 133 ரன்களுக்கு சுருண்டார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இன்று தொடங்கிய முதல் டி20 போட்டி சிட்னியில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாவல் 18 ஓவரில் 133 ரன்களுக்கே சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய அருந்ததி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி

தொடர்ந்து 134 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 5.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்களை அடித்திருந்தநிலையில், ஆட்டம் மழையால் தடைபட்டது. பின்னர் மழை அதிகமானதால் ஆட்டம் கைவிடப்பட்டது. DLS முறைப்படி இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சிட்னி டி20 போட்ட்யில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி
மிகப்பெரிய மோதல்.. இந்தியாவை அச்சுறுத்தக் கூடிய 3 பாகிஸ்தான் வீரர்கள்.. சமாளிக்குமா இந்தியா..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com