4th T20 | 2 பந்தில் 2 விக்கெட்டை கழற்றிய வாசிங்டன்.. ஆஸியை வீழ்த்தி 2-1 என இந்தியா முன்னிலை!
இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4வது டி20 போட்டியில் வீழ்த்தி தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. வாசிங்டன் சுந்தர் 17வது ஓவரில் அடுத்தடுத்த 2 பந்தில் 2 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியதுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெற்றிக்கு பேட்டிங், பவுலிங் இரண்டிலும் பங்களித்த அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கவிருக்கும் நிலையில், இந்திய அணி 5 போட்டிகள் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிவருகிறது..
முதலில் 3 போட்டிகள் முடிவில் 1-1 என ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் சமநிலையில் இருக்கும் நிலையில், தொடரின் 4வது டி20 போட்டி குயின்ஸ்லேண்டில் நடைபெற்றது..
ஆஸ்திரேலியா தோல்வி..
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் சேர்த்தது.. அதிகபட்சமாக சுப்மன் கில் 46 ரன்கள் அடித்தார். சிறப்பாக பந்துவீசிய நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டை விழித்தினார்..
168 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 18.2 ஓவரில் 119 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. 17வது ஓவரில் பந்துவீச வந்த வாசிங்டன் சுந்தர் ஸ்டொய்னிஸ், பார்ட்லெட் இருவரையும் அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தி அசத்தினார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் வாசிங்டன்..
3 விக்கெட்டுகளை வீழ்த்தி வாசிங்டன் அசத்த ஆஸ்திரேலியா 4வது டி20 போட்டியில் தோல்வியை சந்தித்தது.. பேட்டிங்கில் 21 ரன்களும், பவுலிங்கில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்திய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது..

