இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிcricinfo

3வது ODI | 214 ரன்னுக்கு சுருண்ட இங்கிலாந்து.. 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.

முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என வென்ற இந்திய அணி இங்கிலாந்தை மொத்தமாக ஆட்டிப்படைத்தது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

அதற்குபிறகு தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 3-0 என இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தோனி படைத்த பிரத்யேக சாதனை.. 7வது இந்திய வீரராக அசத்திய சுப்மன் கில்!

214 ரன்னுக்கு சுருண்ட இங்கிலாந்து..

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சுப்மன் கில்லின் அதிரடியான சதம் (112), விராட் கோலி (52) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் (78) அரைசதத்தின் உதவியால் 356 ரன்கள் குவித்தது.

shubman gill
shubman gillcricinfo

357 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர்கள் பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 6 ஓவருக்கு 60 ரன்கள் அடித்த இந்த ஜோடியை டக்கெட்டை வெளியேற்றி பிரித்துவைத்தார் அர்ஷ்தீப் சிங். உடன் பிலிப் சால்ட்டும் வெளியேற, முக்கிய வீரரான ஜோ ரூட்டை போல்டாக்கி வெளியேற்றினார் அக்சர் பட்டேல்.

தொடர்ந்து விக்கெட்டுகள் விழ ஆட்டத்தின் போக்கு ஹாரி ப்ரூக் மற்றும் ஜோஸ் பட்லரின் கையில் இருந்தது. ஆனால் அவ்விரண்டு வீரர்களையும் போல்டாக்கி வெளியேற்றிய ஹர்சித் ரானா இந்திய அணியை ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார். அடுத்துவந்த வீரர்களும் சொதப்ப 214 ரன்னுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து.

ஹர்சித் ரானா
ஹர்சித் ரானா

இந்த தோல்வியின் மூலம் 8 போட்டிகள் கொண்ட இந்திய சுற்றுப்பயணத்தில் ஒரேயொரு டி20 போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது இங்கிலாந்து. சிறப்பான தொடக்கம் கிடைத்தும் அவ்வணி வீரர்களால் இறுதிவரை ஆட்டத்தை எடுத்துச்செல்ல முடியவில்லை.

இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்துள்ள இந்திய அணி, ஒரு அபாரமான தொடர் வெற்றியோடு சாம்பியன்ஸ் டிராபிக்குள் காலடி வைக்கவிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி
ரஞ்சிக்கோப்பை | 1 ரன்னில் அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா.. ஹீரோவாக மாறிய சல்மான் நிசார்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com