INDvsWI| கோலி 0, கில் 1 ரன்னில் OUT.. 92 ரன்னில் சதத்தை தவறவிட்ட ரோகித் சர்மா!
நியூ சண்டிகரில் நடந்த INDvsWI போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கில் மற்றும் கோலி விரைவில் அவுட்டானதால் அதிர்ச்சி ஏற்பட்டது. ரோகித் சர்மா 92 ரன்களில் சதத்தை தவறவிட்டார். ருதுராஜ் கெய்க்வாட் 61 ரன்களுடன் சிறப்பாக விளையாடி இந்திய அணியை முன்னேற்றினார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய 2-0 என ஏற்கனவே தொடரை வென்றுள்ளது.
இந்தசூழலில் இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நியூ சண்டிகரில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடிவருகிறது.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி கொடுத்தது. கடந்த போட்டிகளில் சதங்களாக குவித்த கேப்டன் கில் 1 ரன்னிலும், கிங் கோலி 0 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். 4 ரன்னுக்கே 2 விக்கெட்டை இழந்து இந்தியா தடுமாற, 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர்.
10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என அதிரடி காட்டிய ரோகித் சர்மா அடுத்த சதத்தை அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 92 ரன்கள் அடித்திருந்தபோது சிக்ஸ் லைனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஹிட்மேன். சதமடிப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் ருதுராஜ் கெய்க்வாட் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 61 ரன்கள் அடித்து விளையாடிவருகிறார். சமீபத்திய அப்டேட்டின் படி 28 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை அடித்துள்ளது இந்திய அணி.

