\
india - new zealand
india - new zealandx

IND vs NZ| 260 ரன்கள் இலக்கு.. பதிலடி கொடுத்த நியூசிலாந்து.. இந்தியா படுதோல்வி!

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
Published on: 
Summary

260 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஓவரில் வெறும் 172 ரன்களையே அடித்து தோல்வியை தழுவியது. நியூசிலாந்தின் பிலிப்ஸ் மற்றும் பிரேஸ்வெல்லின் அதிரடி ஆட்டம் இந்திய அணியை சிதறடித்தது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் 3 போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி மூன்றிலும் வென்று தொடரை கைப்பற்றியது.

இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் நடைபெற்றது. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 5 ரன்னுக்கு 1 விக்கெட், 34 ரன்னுக்கு 2 விக்கெட் என சுமாராகவே தொடங்கியது. ஆனால் நல்ல ஃபார்மில் இருந்துவரும் கிளென் பிலிப்ஸ் 4வது வீரராக களமிறங்கி சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

49 பந்தில் 10 சிக்சர்கள் 6 பவுண்டரிகளை பறக்கவிட்ட பிலிப்ஸ் 107 ரன்கள் அடித்து இந்தியாவின் பந்துவீச்சை சிதறடித்தார். தொடர்ந்து வந்த மைக்கேல் பிரேஸ்வெல்லும் 25 பந்தில் 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என வெளுத்துவாங்க 20 ஓவர் முடிவில் 259 ரன்கள் என்ற இமாலய டோட்டலை பதிவுசெய்தது நியூசிலாந்து. கடந்த 3 போட்டிகளில் ஏற்பட்ட படுதோல்விக்கு பதிலடி கொடுத்தது.

இந்தசூழலில் 260 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி, 20 ஓவரில் வெறும் 172 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக திலக் வர்மா 35 ரன்கள் அடித்தார். நியூசிலாந்தின் ஜாக்கப் டஃபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

india - new zealand
இவங்க எல்லாம் MI கோச்சா..? தரமான பெயர்களை இறக்கிய மும்பை இந்தியன்ஸ்!