ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்த டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ், அணியின் துணை கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் செயல்படுவார். இஷான் கிஷன், ஜெய்ஷ்வால், திலக் வர்மா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Suryakumar Yadav
இந்தியாவின் தோல்விக்கு அகமதாபாத் மைதானமும் காரணமா? - பிட்ச் முதலில் மிகவும் மந்தமாக இருந்தது எப்படி?

விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ஷிவம் துபே, பிஷ்னோய், அர்ஷ்தீப், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ்குமார் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்ரேயஸ் ஐயர் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியில் துணை கேப்டனாக செயல்படுவார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com