விடாமல் கொட்டித் தீர்த்த மழை.. கைவிடப்பட்ட இந்தியா- தென் ஆப்ரிக்கா முதல் டி20! ரசிகர்கள் ஏமாற்றம்

இந்திய- தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையே டர்பனில் நடக்க இருந்த முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி டர்பனில் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
ind vs sa
ind vs sapt web

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி அங்கு 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டி 20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா போன்றவர்கள் டி 20 அணியில் இடம் பெறாத நிலையில், அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

தென் ஆப்ரிக்க அணியின் கேப்டனாக மார்க்ரம் செயல்பட உள்ளார். இந்திய அணிக்கு எதிரான போட்டித் தொடருக்கு முற்றிலும் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் டர்பன் ஆடுகளத்தில் இந்திய இளம் வீரர்கள் செயல்படுவதை காண ஆவலோடு இருந்த நிலையில் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. டாஸ் போடாமலேயே போட்டி கைவிடப்பட்டுள்ளது. இரண்டாவது டி20 போட்டி டிசம்பர் 12 ஆம் தேதி நடக்க உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com