\
shreyas iyer
shreyas iyerweb

76 ரன்னில் சுருண்ட இந்தியா.. வரலாற்றில் மிக மோசமான 2 சாதனைகள்!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெறும் 76 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணி.
Published on
Summary

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20யில் இந்தியா 201 ரன்களை துரத்திச் செல்லும் போது 76 ரன்களில் ஆல் அவுட் ஆகி, டி20 வரலாற்றில் தனது மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. பிலிப் சால்ட் 70 ரன்களும், ஆர்ச்சர்-டங் சேர்ந்து 7 விக்கெட்டும் இந்தியாவை சிதறடித்தன. 125 ரன் வித்தியாச தோல்வியால், இந்தியா 100+ ரன் வித்தியாசத்தில் முதன்முறையாக தோற்றது.

2026 டி20 உலகக்கோப்பை வென்ற சாம்பியனான இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-2 என இழந்தது. தோல்விக்கு பிறகு புதிய கேப்டன், புதிய வீரர்கள் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது இந்திய அணி.

shreyas iyer
shreyas iyer

5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றுவரும் நிலையில், முதல் போட்டி மழையால் தடைபட்டு, 2வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையே 3வது டி20 போட்டி நேற்று பரபரப்பாக நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பிலிப் சால்ட்டின் அதிரடியால் 201 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக சால்ட் 70 ரன்கள் விளாசினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வெறும் 76 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இது டி20 வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய தோல்வியாக பதிவுசெய்யப்பட்டது. சிறப்பாக பந்துவீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள், டங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.

shreyas iyer
ஒரு சகாப்தத்தின் முடிவு.. முடிவுக்கு வந்த ரொனால்டோவின் பயணம்.. இறுதிவரை நிறைவேறாத கனவு!

2 மோசமான சாதனைகள்!

100+ ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 125 ரன்கள் வித்தியாசத்திலான இந்த தோல்வி தான், இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் பதிவுசெய்யும் முதல் தோல்வியாகும்.

தொடர்ந்து 5 தோல்வி

2024, 2026 என தொடர்ந்து 2 முறை டி20 உலகக்கோப்பை வென்று வரலாறு படைத்த இந்திய அணி, முதல்முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியுற்று மோசமான சாதனை படைத்துள்ளது.

shreyas iyer
Zim. T20 தொடர் | அதிரடியாக நீக்கப்பட்ட சஞ்சு சாம்சன்.. இடத்தைத் தக்கவைத்த வைபவ்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com