பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியாcricinfo

இந்தியா vs பாகிஸ்தான்| 77 ரன்கள் அடித்து மிரட்டிய இஷான்.. 175 ரன்கள் குவித்த இந்தியா!

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 175 ரன்கள் குவித்த இந்திய அணி.
Published on
Summary

இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில், இஷான் கிஷன் 77 ரன்கள் அடித்து இந்திய அணியை 175 ரன்கள் சேர்க்க உதவினார். பாகிஸ்தான் அணியின் சைம் ஆயுப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியானது கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா பந்துவீச்சை தேர்வுசெய்தார். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. 

பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
IND-PAK மோதல்.. மீண்டும் கைக்குலுக்காத 2 கேப்டன்கள்! இந்தியா பேட்டிங்!

175 ரன்கள் அடித்த இந்தியா..

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 0 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். முதல் ஓவரிலேயே ஸ்பின்னரை இறக்கிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, அவரே ஓவரை வீசி அபிஷேக் சர்மாவை வெளியேற்றினார்.

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

ஒருபக்கம் அபிஷேக் சர்மா 0 ரன்னில் வெளியேற, அதற்குபிறகு வந்த திலக்வர்மாவும் பாகிஸ்தான் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறினார். ஆனால் மறுமுனையில் அதிரடி காட்டிய இஷான் கிஷன் 40 பந்தில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து 77 ரன்கள் அடித்து அசத்தினார்.

சைம் ஆயுப்
சைம் ஆயுப்

ஒருகட்டத்தில் 200 ரன்களை இந்தியா அடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இஷான் கிஷன் அவுட்டாகி வெளியேறிய பிறகு பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். கடைசியில் ஷிவம் துபே 3 பவுண்டரிகள் 1 சிக்சர், ரிங்கு சிங் 1 பவுண்டரி 1 சிக்சர் என அடிக்க இந்தியா 20 ஓவரில் 175 ரன்கள் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணியில் சைம் ஆயுப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
மிகப்பெரிய மோதல்.. இந்தியாவை அச்சுறுத்தக் கூடிய 3 பாகிஸ்தான் வீரர்கள்.. சமாளிக்குமா இந்தியா..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com