நியூசிலாந்தை நசுக்கிய இந்தியா.. 3-1 என தொடரை வென்று அசத்தல்!
2027 உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்து மண்ணில் நடந்த சவாலான ஒருநாள் தொடரில் இந்தியா 3-1 என வெற்றி பெற்று தங்களின் ஆற்றலை நிரூபித்தது. கடைசி போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
2027 உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்து மண்ணில் ஒரு சவாலான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது இந்திய அணி. ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்கா மண்ணில் நடைபெறவிருக்கிறது என்பதால் இந்தியாவிற்கு இந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் நல்ல தயாரிப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
தொடர் சவாலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் முதலிரண்டு போட்டிகளையும் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்று தாங்கள் தான் நம்பர் 1 அணி என நிரூபித்தது. ஆனால் சொந்தமண்ணில் மீண்டெழுந்த நியூசிலாந்து அணி 4வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் கடைசி மற்றும் 5வது போட்டி இன்று நடைபெற்ற நிலையில், தொடரை வெல்வதற்காக இந்தியாவும், சமன்செய்வதற்காக நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தின. இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
187 ரன்னுக்கு சுருண்ட நியூசிலாந்து!
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 209 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அதிகபட்சமாக அக்சர் பட்டேல் மற்றும் இஷான் கிஷன் இருவரும் தலா 46 ரன்கள் அடித்தனர்.
210 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய நியூசிலாந்து அணியில், தொடக்க ஜோடியாக களமிறங்கிய வில் யங் மற்றும் சைஃபர்ட் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து நன்றாக தொடங்கினால் இந்தியா சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திக்கொண்டே இருந்தது. நியூசிலாந்து அணி ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயற்சிக்கும்போதெல்லாம் இந்தியா விக்கெட்டை வீழ்த்திக்கொண்டே இருந்தது. எந்த அணி கடைசியில் வெற்றிக்கான கோட்டை கடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு தொற்றிக்கொண்ட நிலையில், கடைசியில் நியூசிலாந்தை இழுத்துப்பிடித்த இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா. இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்,

