\
Magnus Carlsen Risks Losing World No. 1 Ranking to Fabiano Caruana
Magnus Carlsen Faces Threat to World No. 1 Spot as Caruana Closes InPTI

15 ஆண்டு.. முதலிடத்தை இழக்கிறாரா மேக்னஸ் கார்ல்சன்? 7.2 புள்ளி வித்தியாசம்.. பரபரக்கும் செஸ் உலகம்!

வெறும் 7.2 புள்ளிகள் வித்தியாசத்தில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் என்ற அந்தஸ்தை இழக்கும் அபாயத்தை மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) எதிர்கொண்டுள்ளார். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்ல்சன், தனது 15 ஆண்டுகால நம்பர் 1 இடத்தை இழப்பாரா?
Published on: 
Summary

15 ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 செஸ் வீரராக நீடித்து வந்த மேக்னஸ் கார்ல்சன், ஃபாஸ்ட் கிளாசிக்கல் போட்டியில் எதிர்பாராத தோல்வியால் ரேட்டிங் புள்ளிகளை இழந்தார். அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானா, சிறப்பான ஆட்டத்தால் முதலிடத்தை நெருங்கி வருவதால், கார்ல்சனின் முதலிடத்திற்கான போட்டி கடுமையாகியுள்ளது.

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

ஜூலை 2011 முதல் உலகின் நம்பர் 1 செஸ் வீரராகத் தொடர்ந்து நீடித்து வரும் கார்ல்சன் (Magnus Carlsen), ஃபாஸ்ட் கிளாசிக்கல் (Fast Classical) போட்டியின் மூன்றாவது நாளில் ஆர்மீனிய வீரர் ஹைக் மார்டிரோஸ்யனிடம் (Haik Martirosyan) எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தார். இதனால் அவரது ரேட்டிங் புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளன.

ஃபாஸ்ட் கிளாசிக்கல் பிரிவில் மார்டிரோஸ்யன் முதலிடத்தைப் பிடித்தார். அதேநேரத்தில், கார்ல்சன் ஐந்தாவது இடத்திற்குச் சரிந்தார். ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.

இதற்கிடையில், அமெரிக்க கிராண்ட்மாஸ்டரான ஃபேபியானோ கருவானா (Fabiano Caruana), ரேட்டிங் புள்ளிகளில் கார்ல்சனுக்கு நெருக்கமாக முன்னேறி வருகிறார்.

Magnus Carlsen Risks Losing World No. 1 Ranking to Fabiano Caruana
’அந்த பையனுக்கு பயம் இல்ல..’ ஒரே போட்டியில் ஹீரோவான மோஹித் உல்வா.. IPL அணிகளின் டார்கெட் இவர்தான்!
Magnus Carlsen Risks Losing World No. 1 Ranking to Fabiano Caruana
Magnus Carlsen Risks Losing World No. 1 Ranking to Fabiano CaruanaPTI

35 வயதான கார்ல்சன், ஃபாஸ்ட் கிளாசிக்கல் பிரிவில் கடினமான ஆட்டத்தை எதிர்கொண்டார். ஐந்து போட்டிகளை டிரா செய்த அவர், ஒரு போட்டியில் தோல்வியடைந்தார். இதனால் 15.8 ரேட்டிங் புள்ளிகளை இழந்து, அவரது நேரடி ரேட்டிங் 2807.2 ஆகக் குறைந்துள்ளது.

மறுபுறம், அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐந்து போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் டிராவும் செய்துள்ளார். இதன் மூலம் 17 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்று, தனது ரேட்டிங்கை 2800 ஆக உயர்த்தியுள்ளார். தற்போது கார்ல்சனுக்கும் கருவானாவுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 7.2 புள்ளிகளாக மட்டுமே உள்ளது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பான FIDE, அதிகாரப்பூர்வ ரேட்டிங் பட்டியலை மாதந்தோறும் வெளியிடுகிறது. ஆனால், நேரடி ரேட்டிங் என்பது வீரர்களின் தற்போதைய ஆட்டத் திறனின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதனால் கார்ல்சனின் முதலிடத்திற்கான போட்டி மேலும் கடுமையாகியுள்ளது.

Magnus Carlsen Risks Losing World No. 1 Ranking to Fabiano Caruana
Magnus Carlsen Risks Losing World No. 1 Ranking to Fabiano CaruanaPTI

தொடர்ந்து 15 ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துள்ள கார்ல்சனுக்கு தற்போது கடுமையான போட்டி உருவாகியுள்ளது. மறுபுறம், ஃபேபியானோ கருவானா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதலிடத்தை நெருங்கி வருகிறார். வரும் போட்டிகளில் கார்ல்சன் தனது ஆட்டத்தை மீட்டெடுப்பாரா அல்லது புதிய நம்பர் 1 வீரராக கருவானா உருவெடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Magnus Carlsen Risks Losing World No. 1 Ranking to Fabiano Caruana
’உயிரே போனாலும் பாகிஸ்தானிடம் தோற்காத’ கடைசிபந்து வரை போராடிய இந்தியா! 1 விக்கெட்டில் த்ரில் வெற்றி!