\
ind vs nz
ind vs nzsony live screenshot

INDvsNZ| 70/5-லிருந்து தரமான கம்பேக்.. கடைசிவரை திக் திக்.. இந்தியா த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றது.
Published on: 
Summary

நியூசிலாந்து அணியின் 181 ரன்கள் இலக்கை நோக்கி 70/5 என்ற நிலைமையில் தடுமாறிய இந்திய அணி, திலக்வர்மா மற்றும் நிதிஷ்குமார் ரெட்டியின் அதிரடி ஆட்டத்தால் 19.5 ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் மொத்தமாக 445 ரன்கள் அடிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர்களுடைய சிறந்த சேஸிங்கை பதிவுசெய்தது.

இந்தசூழலில் மீண்டும் அதே மைதானத்தில் 2வது போட்டி நடைபெற்றதால் அதிகப்படியான ரன்கள் அடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு அணி பவுலர்களும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 41 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தபோதும், நியூசிலாந்து வீரர்கள் பிலிப்ஸ் மற்றும் ஜாக்கப்ஸ் இருவரும் அடுத்தடுத்து அரைசதமடித்து 180 ரன்களுக்கு அணியை எடுத்துச்சென்றனர்.

181 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணி, 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 15 ஓவரில் 112 ரன்னுக்கு 6 விக்கெட்டை இந்திய இழந்தநிலையில், இனி வெற்றிபெறுவது சாத்தியமில்லை என்றே பார்க்கப்பட்டது. ஆனால் அங்கிருந்து அதிரடியாக விளையாடிய திலக்வர்மா மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி இந்தியாவை ஒரு த்ரில் வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். 19.5 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக திலக் வர்மா 26 பந்தில் 51 ரன்கள் அடித்தார்.

ind vs nz
பாரா ஆசிய விளையாட்டு| ஒரே நாளில் ஒரு தங்கம், 2 வெள்ளி அடித்த துளசிமதி! இந்தியாவுக்கு 114 பதக்கங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com