“15 வருடங்களில் முதல்முறையாக கேட்கிறார்; காரணமில்லாமல் விடுப்பு கேட்பவர் அல்ல விராட் கோலி”- ஜெய் ஷா!

விராட் கோலி எந்த காரணமும் இல்லாமல் விடுப்பு எடுக்கும் வீரர் அல்ல என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
virat, jay shah
virat, jay shahpt web

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி முதல் போட்டியிலும், இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத்தின் ராஜ்கோட் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதனிடையே இந்தப் போட்டியிலும் விராட் கோலி இடம்பெறாத நிலையில், அவரது விடுப்பு குறித்த உரையாடல் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசியிருந்தார்.

திடீரென விடுப்பு கேட்ட விராட் கோலி - பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை

முன்னதாக, தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அதேநேரத்தில், விராட்கோலிக்கு தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளித்து, அதற்கான காரணங்களை யூகிக்க வேண்டாம் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக்கொள்வதாகவும் பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

Virat kohli
Virat kohli

கோலி -அனுஷ்கா தம்பதி குறித்து தான் சொன்ன தகவலை மறுத்த டிவில்லியர்ஸ்!

தொடர்ந்து விராட் கோலியின் விடுப்புக்கான காரணங்கள் குறித்து பலவிதமான கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதற்கிடையில் வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதி இருவரும் தங்களுடைய இரண்டாவது குழந்தையை எதிர்ப்பார்க்கின்றனர் என்று தெரிவித்திருந்த டி வில்லியர்ஸ், அடுத்த சில தினங்களில் கோலி குறித்த பொய்த்தகவலை பகிர்ந்துவிட்டேன் என வருத்தம் தெரிவித்தார். அதனால், என்ன காரணத்திற்காக விராட் கோலி விடுப்பில் இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.

மீதமுள்ள அனைத்து டெஸ்ட்டிலும் இல்லை! ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டிக்கு எப்படியும் திரும்பிவிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகியிருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, அதற்கு பிறகான 13 வருட டெஸ்ட் கரியரில் ஒருமுறை கூட முழு டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகியதில்லை. அவர் இல்லாமல் விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுதான்.

“காரணமும் இல்லாமல் விடுப்பு கேட்கும் வீரர் அல்ல விராட் கோலி”

இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ராஜ்கோட்டில் போட்டிக்கு முன்னதான செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “கோலி எந்த காரணமும் இல்லாமல் விடுப்பு கேட்கும் வீரர் அல்ல. 15 வருடங்களில் இல்லாமல் தற்போது தனிப்பட்ட விடுப்பு கேட்டால், அப்படிக் கேட்பது அவரது தனிப்பட்ட உரிமை. நாங்கள் எங்கள் வீரர்களை நம்புகிறோம். அவரை பாதுகாக்க விரும்புகிறோம். விராட் பற்றி பின்னர் பேசலாம்” என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என்பதையும் உறுதிப்படுத்தினார். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com