ஆட்டத்தை மாற்றிய அந்த 2 விஷயங்கள்.. ஆலோசனை கூறிய குல்தீப் யாதவ்.. கண்டுகொள்ளாத ரோகித்! வைரல் வீடியோ

கேப்டன் ரோகித் சர்மாவை டி.ஆர்.எஸ். கேட்கச் சொல்லி வலியுறுத்தினார் குல்தீப் யாதவ்.
ரோகித் சர்மா
ரோகித் சர்மாட்விட்டர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் 2வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

399 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி ஒருகட்டத்தில், 132/2 என்ற நிலையில் இருந்தபோது ஆலி போப் 23 ரன்களுடன் களத்தில் இருந்தார். முதல் போட்டியில் இவருடைய ஆட்டம்தான் இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித் தந்தது. அதனால், இந்தப் போட்டியில், ஆலி போப்பின் விக்கெட்டை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இருந்தது. அஸ்வின் வீசிய பந்தை ஆலி போப் அடித்து ஆட முற்பட்டார்.

அவர் அடித்த பந்து, ஸ்லிப்பை நோக்கிச் சென்றது. அப்போது ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா அபாரமாக பாய்ந்து அந்த கேட்சை பிடித்தார். ரோகித் சர்மா இந்த கேட்சை பிடிக்க 0.45 நொடிகளை எடுத்துக்கொண்டார். இதன்மூலம் இங்கிலாந்து அணியின் சரிவு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பும்ரா வீசிய ஒரு பந்தை எதிர்முனையில் நின்ற இங்கிலாந்து வீரர் கிராலி எதிர்கொண்டார். அந்தப் பந்து அவரது பேட்டிற்கு மிக அருகில் சென்று, அவரை கடந்து விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. பும்ரா, விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் உள்பட ஸ்லிப்பில் நின்ற அனைவரும் அதனை அவுட் கேட்டு அப்பீல் செய்தனர். அதற்கு நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இருப்பினும், கேப்டன் ரோகித் சர்மா அனைத்து தரப்பையும் விசாரித்து ரிவ்யூவை கேட்காமல் விட்டுவிட்டார்.

இந்தச் சம்பவத்தின்போது, ஸ்கோயர் லெக் திசையில் இருந்த குல்தீப் யாதவ், உடனே ரோகித்திடம் வந்து அது பேட்டில் பட்டதாகவும், ரிவ்யூவை எடுக்கும்படியும் வற்புறுத்தினார். இருப்பினும், அதனைச் சற்றே கடுப்பான தொனியில் மறுத்துவிட்டு, ரிவ்யூ எடுக்காமல் சென்றார். குறிப்பாக, ரோகித் சர்மா குல்தீப் பேச்சை கேட்கவே இல்லை. அதன்பின், சற்று நேரத்தில் பெரிய திரையில் போடப்பட்ட ரீ-பிளேவில் பந்து பேட்டில் படவேயில்லை என்பது தெளிவானது. உடனே, ரோகித் சர்மாவை காண்பிக்க அவர் மிகுந்த முகமலர்ச்சியுடன், கட்டை விரலை காண்பித்து குல்தீப் யாதவைப் பார்த்துச் சிரித்தார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com