\
icc scraps champions trophy plan after india opposes
BcciPTI

ஐசிசி போட்ட திட்டம்.. எதிர்த்த இந்தியா.. சப்போர்ட்டுக்கு வந்த ஆஸி., இங்கிலாந்து!

2027 முதல் 2031 வரையிலான ஐசிசியின் எதிர்காலப் போட்டி அட்டவணையில் (FTP) புதிய உலகளாவிய பிரான்சைஸ் தொடர்கள் சேர்க்கப்படாது என்றும், தற்போதைய தொடர் அமைப்புகளே தொடரும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on: 
Summary

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்ட 'சாம்பியன்ஸ் லீக் டி20' (CLT20) பாணியிலான உலகளாவிய லீக் தொடருக்கு இந்தியா , ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய முன்னணி கிரிக்கெட் வாரியங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், இத்திட்டத்தை ஐசிசி கைவிட்டுள்ளது.

2009 முதல் 2014 வரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்களால் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டது. ஆனால் குறைவான பார்வையாளர்கள் மற்றும் நிதி இழப்பு காரணமாக 2014-க்குப் பிறகு அது கைவிடப்பட்டது. இந்த நிலையில், எதிர்காலத்தில் ஒளிபரப்பு உரிமைகள் மூலம் கிடைக்கும் வருவாய் குறையக்கூடும் என்பதால், புதிய வருவாய் ஆதாரங்களை உருவாக்கவே சர்வதேச அளவில் முன்னணி கிளப் அணிகளை வைத்து இந்தத் தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டது. இதற்கு இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஐசிசி
ஐசிசி

ஐபிஎல், பிக் பேஷ், தி ஹண்ட்ரட் போன்ற உள்நாட்டு டி20 லீக் தொடர்களும், சர்வதேச இருதரப்புப் போட்டிகளும் ஆண்டு முழுவதும் நிரம்பியுள்ளதால், புதிய தொடருக்குக் கால அவகாசம் இல்லை எனவும், புதிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு இடம் ஒதுக்க வேண்டுமெனில், ஒருநாள் உலகக் கோப்பை அல்லது சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஏற்கெனவே உள்ள முக்கிய ஐசிசி தொடர்களின் அளவைக் குறைக்க நேரிடும் என வாரியங்கள் வாதிட்டன. மேலும், இடைவெளியின்றித் தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்கேற்பது வீரர்களின் உடல்நலம் மற்றும் மனநலனைப் பாதித்து, காயங்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, 2027 முதல் 2031 வரையிலான ஐசிசியின் எதிர்காலப் போட்டி அட்டவணையில் (FTP) புதிய உலகளாவிய பிரான்சைஸ் தொடர்கள் சேர்க்கப்படாது என்றும், தற்போதைய தொடர் அமைப்புகளே தொடரும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

icc scraps champions trophy plan after india opposes
ICC கொண்டுவந்த புதிய விதி.. கொந்தளிக்கும் அசோசியேட் நாடுகள்.. பின்னணி என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com