டேரன் சமி - அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்
டேரன் சமி - அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்web

3 தவறான அவுட்களை வழங்கிய 3வது அம்பயர்.. விமர்சித்த WI பயிற்சியாளர் டேரன் சமிக்கு அபராதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பல தவறான முடிவுகளை வழங்கிய பிறகு மூன்றாவது அம்பயராக இருந்த அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்கை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Published on

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுன் பார்படாஸ் மைதானத்தில் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இரண்டு அணி பந்துவீச்சாளர்களும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சூழலில் முதல் டெஸ்ட் போட்டியானது 3 நாட்களுக்குள் முடிவை எட்டியது.

aus vs wi
aus vs wiweb

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 180 ரன்களுக்கு சுருட்டிய பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைகளே ஓங்கியிருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பல தவறான அவுட்களை வழங்கிய மூன்றாவது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் யாரும் எதிர்ப்பாராத வகையில் விண்டீஸ் அணிக்கு வில்லனாக மாறினார்.

இதை போட்டியின் போதே வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் அதிருப்தி தெரிவித்திருந்தார். அம்பயர்களின் முடிவுகள் வீரர்களின் இருப்பிடத்தை தீர்மானிக்கிறது, அவர்கள் தவறான முடிவை வழங்கினால் அது அவர்களுக்கு எந்த பிரச்னையையும் கொடுக்கப்போவதில்லை. ஆனால் வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டுமா வேண்டாமா? என்பதை அம்பயரின் முடிவுகள் தீர்மானிக்கின்றன. அதனால் தவறான முடிவுகளை வழங்கும் அம்பயர்களுக்கும் பெனால்டி கொடுக்கப்பட வேண்டும் என்று அதிருப்தியுடன் பேசியிருந்தார்.

டேரன் சமி - அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்
முதல் சர்வதேச டி20 சதமடித்தார் ஸ்மிரிதி மந்தனா.. TEST, ODI, T20 என அனைத்திலும் சதமடித்து சாதனை!

3 சர்ச்சைக்குரிய அவுட்களை வழங்கிய 3வது நடுவர்..

முதல் நாளில் அரைசதமடித்த டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச்சை ஷாய் ஹோப் நன்றாக பிடித்தார். ஆனால் 3வது நடுவர் ஆண்ட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் அதற்கு எந்தவித கிளியர் எவிடன்ஸும் இல்லை எனக்கூறி நாட் அவுட் அறிவித்தது சர்ச்சையை உண்டாக்கியது.

இரண்டாவது நாளில் பட் கமின்ஸ் எதிர்கொண்ட பந்தில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். அதை ரிவ்யூ செய்த போது பந்து எட்ஜ் ஆகி சென்றது நன்றாக தெரிந்தது. அதனால் தீர்ப்பை மாற்றி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடுவர் ஹோல்ட்ஸ்டார்க் மீண்டும் அவுட் வழங்கியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

3வது சர்ச்சைக்குரிய அவுட்டாக வெப்ஸ்டர் வீசிய பந்தில் ஷாய் கொடுத்த கேட்ச்சை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பிடிக்கும் போது பந்து தரையில் உரசியது நன்றாக தெரிந்தது. அப்போது நாட் அவுட் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அதே அம்பயர் ஹோல்ட்ஸ்டார்க் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவுட் வழங்கியது கிரிக்கெட் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது.

இந்த 3வது நடுவர் ஹோல்ட்ஸ்டாக் வழங்கிய தவறான அவுட்கள் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெறுவதை தடுத்து நிறுத்தியது. 190 ரன்களுக்கே வெஸ்ட் இண்டீஸ் ஆட்டமிழந்தது.

டேரன் சமி - அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்
”இது நடந்தால் 2-வது டெஸ்ட்டிலும் தோல்வி உறுதி..” - இந்திய அணியை எச்சரித்த ரவி சாஸ்திரி!

விமர்சித்த டேரன் சமிக்கு அபராதம்!

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சேஸ் வெளிப்படையாக அதிருப்தியை தெரிவித்திருந்தாலும், தலைமை பயிற்சியாளர் டேரன் சமி செய்தியாளர் சந்திப்பில் மூன்றாவது நடுவரை பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.

மூன்றாவது நடுவரின் தவறான முடிவுகளை விமர்சித்த சமி, “குறிப்பிட்ட அந்த நடுவரை நான் இங்கிலாந்தில் இருந்து பார்த்துவருகிறேன். இப்படியும் அம்பயர் இருப்பாரா என்ற இடத்தில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் எங்களுக்கு எதிராக பல தவறான முடிவுகள் கிடைப்பதை நான் பார்க்கிறேன். இது வெறுப்பூட்டுகிறது, முடிவெடுப்பதில் நிலைத்தன்மையை மட்டுமே நான் கேட்கிறேன். சேஸ் விசயத்தில் பந்து பேட்டில் எட்ஜ் ஆகி சென்றதை நாங்கள் பார்த்தோம்” என்று வெளிப்படையாக விமர்சித்தார்.

இதனை ஐசிசி கடுமையாக கண்டித்து போட்டிக்கட்டணத்தில் 15% அபராதமும், ஒரு டிமெரிட் புள்ளியும் தண்டனையாக வழங்கியுள்ளது. அம்பயரின் தவறுகளை சுட்டிக்காட்டினால் கூட அபராதம் விதிப்பீர்களா என ரசிகர்கள் ஐசிசியையும் விமர்சித்து வருகின்றனர்.

டேரன் சமி - அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்
இது தென்னாப்ரிக்காவின் பொற்காலம்.. அறிமுக டெஸ்ட்டில் சதமடித்த 19 வயது வீரர்! 61 வருட சாதனை உடைப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com