க்ளென் பிலிப்ஸ் - விராட் கோலி
க்ளென் பிலிப்ஸ் - விராட் கோலிx

அபாரமான கேட்ச் பிடித்த க்ளென் பிலிப்ஸ்.. ஷாக்காகி நின்ற கோலி! 3 விக்கெட்டை இழந்த இந்தியா!

2025 சாம்பியன்ஸ் டிராபியில் பலம் வாய்ந்த அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
Published on

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.

11 லீக் போட்டிகள் முடிவை பெற்றுள்ள நிலையில் 8 அணிகளிலிருந்து ‘இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா’ என 4 அணிகள் அரையிறுதியை சீல் செய்துள்ளன.

இந்நிலையில் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால் அதிக எதிர்ப்பார்ப்புடன் போட்டி நடந்துவருகிறது.

க்ளென் பிலிப்ஸ் - விராட் கோலி
"தோல்வியை அவமானமாக கருதுகிறேன்" - இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பட்லர்!

கோலியை திகைக்க வைத்த பிலிப்ஸ்..

சமபலம் கொண்ட அணிகளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வுசெய்தார். முதலில் பேட்டிங் செய்யவந்த இந்தியாவிற்கு ஃபார்மில் இருந்துவரும் சுப்மன் கில்லை 2 ரன்னில் வெளியேற்றினார் மேட் ஹென்றி.

gill
gill

அவரைத்தொடர்ந்து அடித்து ஆட முயற்சித்த கேப்டன் ரோகித் சர்மை மிஸ் ஷாட் மூலம் கேட்ச் கொடுத்து 15 ரன்னில் வெளியேறினார்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோதும், தன்னுடைய 300வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி பாசிட்டிவான கிரிக்கெட்டை விளையாடினார்.

அழுத்தத்தை குறைக்கும் முயற்சியில் விராட் கோலி சிறப்பாக தொடங்கினாலும், ஒரு அற்புதமான கட் ஷாட்டை விராட் கோலி அடிக்க அதை ஒரு ஸ்டன்னிங் கேட்ச்சாக பிடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார் க்ளென் பிலிப்ஸ். வெறும் 0.62 நொடிகளில் ஷார்ப்பாக க்ளென் பிலிப்ஸ் எடுத்த கேட்ச்சை பார்த்து விராட் கோலி திகைத்து போய் களத்தில் நின்றார்.

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 27.3 ஓவரில் 118/3 என விளையாடிவருகிறது. ஸ்ரேயாஸ், அக்சர் ஜோடி இந்திய அணியை மீட்க போராடி வருகிறது. ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.

க்ளென் பிலிப்ஸ் - விராட் கோலி
பாகிஸ்தான் தோல்விக்கு என்ன காரணம்..? எல்லோரையும் திகைக்க வைத்த கேப்டன் ரிஸ்வான் பதில்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com