\
Glenn Maxwell Retires from International Cricket
மேக்ஸ்வெல்Reuters

’The Big Show' ஓய்வு பெற்றார் மேக்ஸ்வெல்.. 14 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பயணம் நிறைவு!!

இருப்பினும், ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு பிரான்சைஸ் டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on: 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரும் ஆல்-ரவுண்டருமான கிளென் மேக்ஸ்வெல் (38), கடந்த 2012 சார்ஜாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளின் போது, டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2013-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது அறிமுகமானார்.

Reuters

இதுவரை , ஆஸ்திரேலிய அணிக்காக 149 ஒருநாள் போட்டிகள், 130 டி20 போட்டிகள் மற்றும் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 10 சதங்களைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, ஒருநாள் போட்டிகளில் 3,990 ரன்களும், டி20 போட்டிகளில் 2,897 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், 136 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்தார்.

Glenn Maxwell Retires from International Cricket
’லைன் & லெந்தில் புலி..’ ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள்! ஹர்ஷ் துபே மிரட்டல்!

2015 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற அணியிலும், 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற அணியிலும் மேக்ஸ்வெல் பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 2023 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடுமையான காயத்துடன் விளையாடி, ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் குவித்த அவரது ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.

இதற்கிடையே, சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கடைசியாக ஒரு போட்டியில் விளையாடி விடைபெற வேண்டும் என மேக்ஸ்வெல் விரும்பியதாகவும் ஆனால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் புதிய வீரர்களைக் கொண்ட அணியை அறிவித்ததால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்Reuters

இந்தச்சூழலில் தான், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேக்ஸ்வெல் தற்போது அறிவித்துள்ளார். இருப்பினும், ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு பிரான்சைஸ் டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வரை ஆஸ்திரேலியா மட்டுமின்றி கிரிக்கெட் விளையாடப்படும் பல்வேறு நாடுகளில் தனது ஆட்டத்திறமையால், ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள மேக்ஸ்வெல் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருகிறது.

Glenn Maxwell Retires from International Cricket
ODI-ல் 99 விக்கெட்.. ஆனாலும் புறக்கணிப்பா? - ராஜேஸ்வரி கெய்க்வாட் வேதனை