கவுதம் கம்பீர் மீது விழும் விமர்சனங்கள்
கவுதம் கம்பீர் மீது விழும் விமர்சனங்கள்web

அடி மேல் அடி : சொந்த வீரர்களுக்கே பரிச்சயம் இல்லாத PITCH-கள்., அணியை சிதைக்கிறாரா கம்பீர்?

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை மோசமாக தோற்றபிறகு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Published on

பொதுவாக ஒரு நாடு சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது என்றால் வீரர்களுக்கு பரிச்சயமான ஆடுகளங்களையும், மேட்ச் வின்னிங் டிராக்குகளையும் மட்டுமே தயார் செய்வார்கள்..

ஆனால், கம்பீர் தலைமையிலான நிர்வாகம் இந்திய வீரர்களுக்கே சவால் தரக்கூடிய மைதானங்களையும், சொந்த வீரர்களே தடுமாறக்கூடிய ஆடுகளங்களையும் தயார் செய்து வருகின்றது.. இது இந்திய அணி 12 ஆண்டுகளாக சொந்தமண்ணில் டெஸ்ட் தொடரில் தோற்காத வரலாற்று சாதனையை முடிவுக்கு கொண்டுவந்தது.. அதிலும் சொந்தமண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என தோற்றதெல்லாம் குற்றத்தில் சேர்க்கப்படவேண்டிய ஒன்று..

கவுதம் கம்பீர் மீது விழும் விமர்சனங்கள்
22 நாட்களில் பறிபோன ரோகித்தின் சாதனை.. 46 ஆண்டுகளுக்கு பிறகு நியூசி வீரர் படைத்த பிரம்மாண்டம்!

சொந்த வீரர்களுக்கே பரிச்சயம் இல்லாத ஆடுகளங்கள்..

இந்தசூழலில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில்தான் பிட்ச்சை மாற்றியது இந்தியாவிற்கு சோதனையாக மாறியதென்றால், அதிலிருந்து பாடம் கற்காத இந்திய அணி நிர்வாகம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அதே தவறை மீண்டும் செய்துள்ளது..

அதிலும் கடந்த 6 ஆண்டுகளாக இந்தியா கொல்கத்தாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடியதே இல்லை.. அதேபோல கடந்த கால்நூற்றாண்டாக 2வது டெஸ்ட் நடைபெறும் குவஹாத்தியில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதில்லை.. இந்திய வீரர்களுக்கே அது பரிச்சயம் இல்லாத மைதானமாக இருக்கும் சூழலில், எதற்காக அதை தேர்வுசெய்தார்கள் என்பது புரியவில்லை..

jadeja
jadeja

குவஹாத்தியில் கடைசி 10 ஆண்டுகளில் 4 டி20 போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது..

இந்தியா மீண்டும் சொந்தமண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கும் நிலையில் இருப்பதை பல முன்னாள் வீரர்கள் எச்சரித்துள்ளனர்.. கவுதம் கம்பீர் மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர்..

கவுதம் கம்பீர் மீது விழும் விமர்சனங்கள்
SAவிடம் தோல்வி.. கம்பீரை நீக்க வலுக்கும் கோரிக்கை.. கங்குலி சொல்வது என்ன?

கம்பீரை விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்..

அஸ்வின் - குவஹாத்தி இந்தியாவில் தான் இருக்கிறது என்றாலும் அது இந்திய வீரர்களுக்கே வெளிநாட்டு மைதானம் போன்றது தான்.. எதற்காக அதை தேர்வுசெய்தார்கள் என்பது புரியவில்லை.. அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது..

இந்திய வீரர்கள் தற்போது சுழற்பந்துவீச்சுக்கு எதிரான திறமையானவர்களாக இருக்கவில்லை, மாறாக அவர்கள் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சிறந்த வீரர்களாக இருக்கின்றனர்.. வெளிநாட்டு மைதானங்களில் வெற்றிபெறுவதை குறிக்கோளாக வைத்திருப்பதால் அவர்களால் சொந்தமண்ணில் ஸ்பின்னுக்கு எதிராக சிறப்பாக விளையாட முடிவதில்லை.. கொல்கத்தா மைதானம் அப்படி ரியாக்ட் செய்யக்கூடிய ஆடுகளமே இல்லை, நீங்கள் ஆடுகளத்தின் தன்மையை மாற்ற முடிந்தால் உங்களுக்கு இதுபோலான முடிவுகள் தான் கிடைக்கும்..

கவுதம் கம்பீர் மீது விழும் விமர்சனங்கள்
One Man | ஜடேஜா வெளியேறினால் 8 ஓட்டைகள் விழும்.. CSK-க்கு இவ்வளவு பிரச்னைகளா??

சுனில் கவாஸ்கர் - தற்போதெல்லாம் இந்திய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை விரும்பவில்லை.. ஒரு வீரர் தன்னுடைய தேசத்திற்காக எப்போதும் விளையாட தயாராக இருக்கவேண்டும்.. ஆனால் இவர்கள் பணிச்சுமை என்ற ஒரு வார்த்தையை பிடித்துக்கொண்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்கின்றனர்.. ஃபார்ம் அவுட்டானால் மட்டுமே உள்நாட்டு போட்டிகளில் விளையாட நினைக்கிறார்கள், இல்லையா எதற்காக நாம் விளையாட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது..

அதற்கும் மேலாக அணியில் ஒரு டெஸ்ட் ஆல்ரவுண்டரை விளையாட வைக்காமல், பார்ட் டைம் ஆல்ரவுண்டரை விளையாடவைப்பது மோசமான ஒரு நகர்வு.. இதைவிடுத்து உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் மீது கவனம் செலுத்தவேண்டிய பொறுப்பை இந்ததோல்வி உணர்த்தியுள்ளது.. கொல்கத்தா தோல்வியானது இந்திய அணிக்கு தங்களுடைய தவறுகளை திருத்திக்கொள்ள ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது, ஒருவேளை இந்தபோக்கை மாற்றாமல் போனால் 2027 WTC பைனலையும் இந்திய அணி தவறவிட நேரிடும்..

கவுதம் கம்பீர் மீது விழும் விமர்சனங்கள்
"விஸ்வாசத்தை பணத்தால் வாங்க முடியாது" | பதிரானாவையும் வெளியேற்றும் சிஎஸ்கே? என்ன நடக்கிறது?

புஜாரா - இந்திய அணி சொந்த மண்ணில் தோற்பதை ஜீரணிக்கவே முடியாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளில் தோற்றால்கூட, அணியின் மாறுதலுக்கான நேரம் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் உள்ள திறமையையும், ஆற்றலையும் பாருங்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களின் முதல் தர கிரிக்கெட் சாதனைகளைப் பாருங்கள். இவ்வளவு சிறப்பான சாதனைகளைக் கொண்ட வீரர்கள் இருந்தும், நாம் இந்தியாவிலேயே தோற்கிறோம் என்றால், அணியில் ஏதோ ஒருபெரிய தவறு இருக்கிறது..

கவுதம் கம்பீர் மீது விழும் விமர்சனங்கள்
LOYALTY-க்கு வேலை இல்ல | CSK to SRH.. தூணாக நின்ற வீரர்களையே தூக்கியெறிந்த 5 அணிகள்!

முகமது கைஃப் - இந்திய அணியில் அனைத்து வீரர்களும் பயத்தில் விளையாடியது போல இருந்தது.. அணியில் நிறைய குழப்பம் உள்ளதாக தோன்றுகிறது.. வீரர்களுக்கு நம்பிக்கை இல்லை.. சர்பராஸ் கான் சதமடித்த பிறகும் அவருக்கு வாய்ப்பு இல்லை என்ற சூழல் நிலவும்போது, நீங்கள் சிறப்பாக விளையாடினாலும் உங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை என்ற நிலையில் வீரர்கள் இருக்கிறார்கள்.. கேப்டன்சியிலும் முதிர்ச்சி இல்லாதது தெரிந்தது..

வாஷிங்டன் சுந்தர் ஏன் சிறப்பாக விளையாடினார் என்றால், அவர் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சேப்பாக்கத்தில் விளையாடி வளர்ந்தவர்.. அவர் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் எப்படி ஆடவேண்டும் என்பதை தெரிந்துவைத்துள்ளார்.. அதேபோல சாய் சுதர்சனும் சென்னையில் வளர்ந்தவர் தான், அவரும் ஸ்பின்னுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர், கடைசி போட்டியில் 87 ரன்களும் அடித்து ஃபார்மில் இருக்கிறார்.. ஒருவேளை சாய் சுதர்சன் நம்பர் 3 வீரராகவும், வாஷிங்டன் நம்பர் 8 வீரராகவும் விளையாடியிருந்தால் நாம் போட்டியை வென்றிருப்போம்.. மொத்தமாக அணியில் குழப்பம் நிலவுகிறது..

கவுதம் கம்பீர் மீது விழும் விமர்சனங்கள்
”க்ரீன் வேண்டாம்.. ஆண்ட்ரே ரஸ்ஸலை CSK குறிவைக்கவேண்டும்..” - அஸ்வின் யோசனை!

வாசிம் ஜாஃபர் - நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிறது. இதுபோன்ற ஆடுகளங்களில் நமது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் எதிரணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இடையேயான வித்தியாசம் பெரிதாக இருக்கவில்லை. 2016-17 சீசனில் விராட் கேப்டனாக இருந்தபோது பயன்படுத்திய பழமையான இந்திய ஆடுகளங்களுக்கு நாம் திரும்ப வேண்டும்..

கவுதம் கம்பீர் மீது விழும் விமர்சனங்கள்
இந்திய வீரர்களிடம் ஸ்பின்னுக்கு எதிரான திறமை இருக்கிறதா..? அஸ்வினை தொடர்ந்து கவாஸ்கர் விமர்சனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com