பதிரானா
பதிரானாweb

"விஸ்வாசத்தை பணத்தால் வாங்க முடியாது" | பதிரானாவையும் வெளியேற்றும் சிஎஸ்கே? என்ன நடக்கிறது?

2024 ஐபிஎல்லின்போது மும்பை இந்தியன்ஸ் அணி வர்த்தகத்திற்கு கேட்டபோது விஸ்வாசத்தை பணத்தால் வாங்க முடியாது என்று சிஎஸ்கேவிற்காக பதிவிட்ட பதிரானாவையே தற்போது சென்னை அணி வெளியேற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
Published on

இலங்கை அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் லசித் மலிங்காவை போலவே ஸ்லிங்கி பவுலிங் ஆக்சனுடன், 140+கிமீ-க்கு மேல் வீசக்கூடிய இலங்கை பவுலர் மதீசா பதிரானாவை கண்டறிந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..

சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற மிகப்பெரிய லீக் கிரிக்கெட் அணி, தோனி போன்ற ஒரு தலைசிறந்த கேப்டனுக்கு கீழ் பட்டைத்தீட்டப்பட்ட பதிரானா சென்னை அணியின் டெத் ஓவர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டார்..

பதிரானா
பதிரானா

தொடர்ந்து சிஎஸ்கே அணி வெற்றிகளை குவிக்க காரணமாக இருந்த மதீசா பதிரானாவை, 2025 ஐபிஎல் தொடருக்காக 13 கோடி கொடுத்து தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..

இந்நிலையில் தொடர்ச்சியான காயம் மற்றும் குறைவான வேகத்தில் பந்துவீசுவது, பவுலிங் ஆக்சனில் மாற்றம் போன்றவற்றால் பின்னடைவை சந்தித்துள்ளார் பதிரானா. இந்தசூழலில் அவரை அணியிலிருந்து வெளியேற்ற சிஎஸ்கே முடிவுசெய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

பதிரானா
2026 ஐபிஎல் வர்த்தகம்| ஜடேஜா முதல் ஷமி வரை.. அணி மாறிய 8 வீரர்கள்! யார் யார்? விவரம்!

பதிரானாவையும் வெளியேற்றும் சிஎஸ்கே..

2024 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு பிரைம் ஃபார்மில் இருந்துவந்த பதிரானாவை வர்த்தகம் செய்ய மும்பை இந்தியன்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.. ஆனால் அப்போது தன்னுடைய வலைதளப்பக்கத்தில் ‘விஸ்வாசத்தை பணத்தால் வாங்க முடியாது’ என்று பதிரானா பதிவிட்டிருந்தார்.

பதிரானா
One Man | ஜடேஜா வெளியேறினால் 8 ஓட்டைகள் விழும்.. CSK-க்கு இவ்வளவு பிரச்னைகளா??

இந்தசூழலில் 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு அனுப்பியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பதிரானாவையும் வெளியேற்றும் திட்டத்தில் இருப்பதாக கிறிக்இன்ஃபோ தெரிவித்துள்ளது. 2026 ஐபிஎல் ஏலத்திற்கான தக்கவைப்பு பட்டியல் 3 மணிக்குள் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி பதிரானாவை வெளியேற்றவிருப்பதாகவும், ஆனால் மீண்டும் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கிறிக்இன்ஃபோ தெரிவித்துள்ளது.

பதிரானா
”ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்கு வெறும் அணியல்ல வீடு..” - ரவீந்திர ஜடேஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com