”ஹிந்து என்பதால் லிஸ்ட்ல இருந்து என் பெயரையே எடுத்துட்டாங்க!” - பாக். முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக இருந்த தினேஷ் கனேரியா மீண்டும் பாகிஸ்தான் அணி மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
Danish Kaneria
Danish KaneriaX

முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளரான டேனிஷ் கனேரியா தனது சமீபத்திய பேட்டிகளில் பாகிஸ்தான் அணி குறித்தும், அந்த அணியின் கேப்டனாக இருந்த ஷாஹித் அப்ரிடி மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணி “தன்னுடைய டெஸ்ட் விக்கெட்டுகளின் ரெக்கார்டை பதிவுசெய்யாமல், மற்ற பவுலர்களின் ரெக்கார்டை மட்டும் பதிவுசெய்துள்ளதாக” குற்றச்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானுக்காக விளையாடிய 2வது இந்து வீரர் கனேரியா!

பாகிஸ்தானுக்காக விளையாடிய இரண்டாவது இந்து கிரிக்கெட் வீரர் கனேரியா ஆவார். பாகிஸ்தானுக்காக சர்வதேச கிரிக்கெட்டில், 61 டெஸ்ட் மற்றும் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், டெஸ்ட்டில் 261 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த கனேரியா, 15 முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

Danish Kaneria - Shahid Afridi
Danish Kaneria - Shahid Afridiweb

2010ஆம் ஆண்டு டிரென்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில், அவர் தனது கடைசி சர்வதேச போட்டியில் பங்கேற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கனேரியாவை விட வேறு எந்த பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. அந்தளவு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த கனேரியா, அவர் பாகிஸ்தான் அணியில் இருந்தபோது தான் ஹிந்துவாக இருந்ததால் சரிசமமாக நடத்தப்படவில்லை என்றும், ஷாஹித் அப்ரிடி தன்னை மதம்மாற்ற முயன்றதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது தான் ஒரு ஹிந்துவாக இருப்பதால் தன்னுடைய பவுலிங் ரெக்கார்டை கூட பாகிஸ்தான் கிரிக்கெட் லிஸ்ட் அவுட் செய்யவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

Danish Kaneria
“ஷாகித் அப்ரிடி என்னை வலுக்கட்டாயமாக மதம் மாற கட்டாயப்படுத்தினார்”-முன்னாள் பாக்.வீரர் குற்றச்சாட்டு

நான் ஹிந்துன்றதால பட்டியலில் இருந்து பெயரை எடுத்துட்டாங்க!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி 26ஆம் தேதி மெல்போர்னில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தான் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் பவுலர்களின் லிஸ்ட்டை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. அதில் தன்னுடைய பெயர் இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் டேனிஸ் கனேரியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் டேனிஸ் கனேரியா, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் பவுலர்களின் லிஸ்ட்டில் தனது பெயர் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அவருடைய பதிவில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் துணிச்சலைப் பாருங்கள். நான் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை எடுத்தேன், ஆனால் அவர்கள் பட்டியலில் இருந்து எனது பெயரையே நீக்கிவிட்டனர். எனக்கு எதிராக பாகிஸ்தான் எந்தளவு பாகுபாடுடன் இருக்கிறது என்பதற்கு ஒரு வாழும் உதாரணம் இதுதான்” என்று கனேரியா பதிவிட்டுள்ளார்.

மதத்தால் நீக்கவில்லை.. அது சிறந்த சராசரி பட்டியல் அவ்வளவுதான்!

டேனிஸ் கனேரியா பதிவிட்டிருக்கும் அந்த பதிவில், ரிப்ளை கமெண்டில் பதிவிட்டிருக்கும் சிலர் “மதத்தின் அடிப்படையில் உங்களுடைய பெயரை நீக்கவில்லை. அந்த பட்டியலில் சிறந்த சராசரி உடைய பவுலர்களின் பட்டியல், அவ்வளவுதான்” என பதிவிட்டுவருகின்றனர்.

ஆனால் கனேரியா பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் சிறந்த பவுலர்கள், சிறந்த சராசரி என்றெல்லாம் எந்த பெயரும் இடப்படவில்லை. மேலும் அவரை விட குறைவான விக்கெட்டுகளை எடுத்துள்ள பெயர்களும் இடம்பெற்றுள்ளன எனவும், ஹிந்து என்பதால் இப்படி ஒரு வீரரின் பெயரை நீக்கக்கூடாது எனவும் பதிவிட்டுவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com