“ஷாகித் அப்ரிடி என்னை வலுக்கட்டாயமாக மதம் மாற கட்டாயப்படுத்தினார்”-முன்னாள் பாக்.வீரர் குற்றச்சாட்டு

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி தன்னை வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றதாக முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Danish Kaneria - Shahid Afridi
Danish Kaneria - Shahid Afridiweb

முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளரான டேனிஷ் கனேரியா தனது சமீபத்திய பேட்டிகளில் சக வீரரும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டனுமான ஷாஹித் அப்ரிடி மீது சில கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

பாகிஸ்தானுக்காக விளையாடிய 2வது இந்து வீரர் கனேரியா!

பாகிஸ்தானுக்காக விளையாடிய இரண்டாவது இந்து கிரிக்கெட் வீரர் கனேரியா ஆவார். பாகிஸ்தானுக்காக சர்வதேச கிரிக்கெட்டில், 61 டெஸ்ட் மற்றும் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், டெஸ்ட்டில் 261 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த கனேரியா, 15 முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

Danish Kaneria
Danish Kaneria

2010 ஆம் ஆண்டு டிரென்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில், அவர் தனது கடைசி சர்வதேச போட்டியில் பங்கேற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கனேரியாவை விட வேறு எந்த பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. அவர் எப்போதும் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதை விரும்பியவர் மற்றும் மென் இன் ப்ளூவுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

அப்ரிடி என்னை வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றார்!

முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளரான டேனிஷ் கனேரியா தன்னுடைய சகவீரரான ஷாகித் அப்ரிடி மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்தார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “எனது கிரிக்கெட் வாழ்க்கை நன்றாகவே சென்றுகொண்டிருந்தது. பாகிஸ்தான் அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரர் நான் தான். கவுண்டி கிரிக்கெட்டிலும் கூட சிறப்பாகவே செயல்பட்டேன். இன்சமாம்-உல்-ஹக் மற்றும் சோயப் அக்தர் போன்ற வீரர்களின் ஆதரவு எனக்கு இருந்தது. ஒரு கேப்டனாக என்னை ஆதரித்த ஒரே நபர் இன்சமாம் தான். ஆனால் ஷாகித் அப்ரிடி மற்றும் மற்ற பிற வீரர்கள் என்னை மிகவும் பாகுபாடோடு நடத்தினார்கள்.

அவர்கள் என்னுடன் அமர்ந்து உணவு கூட உண்டதில்லை. தொடர்ந்து மதமாற்றம் செய்வது குறித்து என்னிடம் அதிகம் பேசுவார்கள். அதில் ஷாஹித் அப்ரிடி தான் அதிகமாக பேசுவார், என்னை கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றார். ஆனால் இன்சமாம் உல் ஹக் அப்படி ஒருபோதும் கூறியதில்லை” என்று ஆஜ் தக்கிடம் கனேரியா பேசியுள்ளார்.

மகள் இந்து பூஜை செய்த போது டிவியை உடைத்த அப்ரிடி!

தொடர்ந்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் டேனிஷ் கனேரியா, ஷாகித் அப்ரிடி முன்னாதாக பேசியிருந்த வீடியோ ஒன்றை ஷேர் செய்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஷாகித் அப்ரிடியின் மகள் வீட்டிலிருக்கும் டிவிக்கு இந்து பூஜையான ஆர்த்தி எடுத்துக்கொண்டிருக்கும் போது, மகள் இந்து பூஜை செய்ததற்காக டிவியை உடைத்ததாக” பேசியுள்ளார்.

அந்த வீடியோவை பகிர்ந்துள்ள கனேரியா, “ஷாஹித் அப்ரிடி தனது மகள் பூஜை செய்ததால் டிவியை உடைத்தார். அப்பாவியான தனது மகளுக்கு எதிராகவே அவரால் அதைச் செய்ய முடிந்தால், எனக்கு எதிராக எப்படி நடந்துகொண்டிருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com