\
india t20 team
india t20 teamweb

’இங்கிலாந்திடம் சரணடையவா போனீங்க..’ இந்திய அணியை சாடிய முன்னாள் கேப்டன்!

டி20 உலக சாம்பியனாக இருந்தபோதும் இந்திய அணி முழுமையாக இங்கிலாந்திடம் சரணடைந்துவிட்டதாக முன்னாள் இந்திய கேப்டன் சாடியுள்ளார்.
Published on
Summary

உலகின் நம்பர் 1 டி20 அணியான இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து, குறிப்பாக 3வது போட்டியில் 76 ரன்னில் சுருண்டு 125 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வி கண்டது. இந்த சரிவை முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தீவிரமாக விமர்சித்து, பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம், தவறான பேட்டிங் வரிசை, பந்துவீச்சாளர்களை அடிக்கடி மாற்றும் தந்திரம் ஆகியவை அணியை அழிவின் பாதைக்கு தள்ளியதாக குற்றம்சாட்டினார்.

உலகின் நம்பர் 1 டி20 அணியாக இருக்கும் இந்தியா மற்றும் உலகின் நம்பர் 2 அணியாக இருக்கும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மோதல் என்பது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அயர்லாந்து தொடரை 0-2 என முழுமையாக இழந்த இந்திய அணி, இங்கிலாந்து தொடரிலும் அதையே பிரதிபலித்துவருகிறது. இதுவரை 3 போட்டிகள் கடந்துள்ள நிலையில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றிபெறவில்லை, அதிலும் 3வது டி20 போட்டியில் 76 ரன்னில் சுருண்டதோடு 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்திருப்பது இந்தியாவை ஒரு அழிவின் பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளது.

மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே தொடரை சமன்செய்யும் நிலை உருவாகியிருக்கும் சூழலில், இங்கிலாந்திடம் சரணடைந்த இந்திய அணியை முன்னாள் இந்திய கேப்டனும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கடுமையாக விமர்சித்துள்ளார்.

india t20 team
கேப்டனாக 5 போட்டியில் வரிசையாக தோல்வி.. சொந்த அணியையே சாடிய ஸ்ரேயாஸ் ஐயர்!

இதுகுறித்து போட்டி குறித்த உரையாடலில் பேசியிருக்கும் அனில் கும்ப்ளே, “இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் பொறுமையையும் அர்ப்பணிப்பையும் காட்டியிருக்க வேண்டும், ஆனால் அனைவரும் அழுத்தத்தை சமாளிப்பதற்கு பதிலாக அடித்து ஆட முயற்சித்து வீழ்ந்தனர். வெற்றிக்குத் தேவையான ரன் விகிதம் 10-க்கும் அதிகமாக இருந்தாலும், யாராவது ஒருவராவது பொறுப்பேற்று இறுதிவரை பேட் செய்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர்கள் ஆக்ரோஷமான பாதையைத் தேர்ந்தெடுத்து, பேட்டிங் சரிவின் மூலம் அதற்கான விலையைக் கொடுத்தனர்” என்று கூறினார்.

அனில் கும்ப்ளே
அனில் கும்ப்ளே

மேலும், ஷிவம் துபேவுக்கு முன்னதாக ஹர்சித் ராணா களமிறக்கப்பட்டதை விமர்சித்த அவர், டி20 கிரிக்கெட்டில், உங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களைத்தான் முதலில் களமிறக்க வேண்டும். ஷிவம் துபே போன்ற ஒரு முழுமையான பேட்ஸ்மேனுக்கு முன்னதாக ஹர்ஷித் ராணாவை பேட் செய்ய அனுப்பியது தவறு. அழுத்தமான நேரத்தில் தன்னை நிரூபித்த ஒரு வீரருக்கு முன்னதாக, எட்டாவது இடத்தில் ஆடும் ஒரு வீரரை பேட் செய்ய அனுப்புவதன் மூலம் அவர் ஒரு போட்டியை வென்று தருவார் என்று எதிர்பார்க்க முடியாது.

அதேபோல, பந்துவீச்சாளர்கள் விஷயத்தில் ஒவ்வொரு போட்டியிலும் மாற்றங்களைச் செய்வதை நிறுத்த வேண்டும்” என்று கும்ப்ளே அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

india t20 team
IND Vs ENG | இன்றைய போட்டியில் இந்தியா தோற்றால்.. 2019இல் நடந்த அதே வரலாறு.. ஸ்ரேயாஸுக்கு தலைவலி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com