”அமைதியாக இருப்பதே சிறந்த பதில்” - இணையத்தில் வைரலாகும் பும்ரா பதிவு... இதுதான் காரணமா?

மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் இன்ஸ்டா பதிவு, இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
bumrah
bumrahபுதிய தலைமுறை

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள 17வது ஐபிஎல் தொடருக்கான பணிகள், இப்போதே ஆரம்பமாகிவிட்டன. இதற்கான மினி ஏலம் அடுத்த மாதம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக அனைத்து அணிகளுக்கும் இடையில் வீரர்களை மாற்றிகொள்ள டிரேடிங் முறை நடைபெற்றது. இதில் பல வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் முக்கியமாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கடந்த இரண்டு சீசன்களாக தலைமையேற்றிருந்த ஹர்திக் பாண்டியா, மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

அதோடு தற்போது 36 வயதை எட்டி இருக்கும் ரோகித் சர்மா, அடுத்துவரும் ஆண்டுகளில் ஓரங்கட்டப்படுவார் என்றும், அதற்கு முன்பாகவே மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த சிறந்த கேப்டன் தேவை என்பதாலேயே ஹர்திக் பாண்டியாவை அவ்வணி தூக்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், எதிர்காலத்திலோ அல்லது ஒருவேளை அடுத்த ஐபிஎல் தொடரிலோ ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பை ஏற்பது மும்பை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு பிடிக்கவில்லை என்றும் அவருக்கு மும்பை அணியின் நிர்வாகத்துடன் தற்போது மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவியுள்ளன.

இதையும் படிக்க: எச்சரித்த நடுவர்! எதிர்ப்பை மீறி பாலஸ்தீன கொடியுடன் பேட்டை பயன்படுத்திய பாக். வீரருக்கு அபராதம்!

இதற்கு முக்கியக் காரணம், ஜஸ்ப்ரீத் பும்ரா தன்னுடைய இன்ஸ்டா பதிவில் “சில நேரங்களில் அமைதியாக இருப்பதுதான் சிறந்த பதில்” எனப் பதிவிட்டுள்ளார். இதையடுத்தே நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் ரோகித் சர்மாவிற்கு அடுத்து பும்ராவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது மீண்டும் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பியிருப்பது அவரை மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதனடிப்படையிலேயே இந்தப் பதிவை அவர் வெளியிட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும், இந்தப் பதிவுக்கான அர்த்தம், பும்ராவுக்கு மட்டுமே தெரிந்ததாகும்.

இதையும் படிக்க: MI-க்கு சென்ற ஹர்திக்; RCB-க்கு சென்ற க்ரீன்; CSK-வில் மீண்டும் தோனி! 10 அணிகளின் முழு Trades விவரம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com