\
engw vs slw
engw vs slwcricinfo

மகளிர் டி20 உலகக்கோப்பை| முதல்போட்டியிலேயே உலகசாதனை படைத்த இங்கிலாந்து.. சதமடித்த வீராங்கனை!

மகளிர் டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி.
Published on
Summary

பர்மிங்ஹாமில் தொடங்கிய 10வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடக்கப் போட்டியிலேயே இங்கிலாந்து அணி உலகசாதனை படைத்தது. இலங்கைக்கு எதிராக 20 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்து, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்தது. டானி வியாட்-ஹாட்ஜ் 62 பந்தில் 105 ரன்கள் குவித்து சதமடித்தார்.

12 அணிகள் பங்கேற்கும் 10ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இன்று தொடங்கியது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குருப் ஏவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-வில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

Danni Wyatt-Hodge
Danni Wyatt-Hodge

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தொடக்க போட்டியில் சொந்த மண்ணில் இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடியது இங்கிலாந்து அணி.

engw vs slw
ரொனால்டோ அணியின் பலவீனம்.. பிரேசில், ஜெர்மனிக்கு வாய்ப்பு உண்டா? FIFA கோப்பையை வெல்லும் அணி எது?

219 ரன்கள் குவித்து பிரமாண்ட வெற்றி!

பர்மிங்ஹாமில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில், முதலில் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 219 ரன்கள் குவித்தது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை டானி வியாட்-ஹாட்ஜ் 62 பந்தில் 13 பவுண்டரிகள் 1 சிக்சர் உதவியுடன் 105 ரன்கள் குவித்து மிரட்டினார். டி20 உலகக்கோப்பையில் அதிகபட்ச டோட்டலை பதிவுசெய்து உலகசாதனைபடைத்தது இங்கிலாந்து மகளிர் அணி. இதற்கு முன் 213 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது, அதையும் இங்கிலாந்து அணியே அடித்திருந்தது.

வியாட்-ஹாட்ஜ் அடித்த டி20 சதமே டி20 உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட முதல் சதமாகும்.

இந்நிலையில் 220 அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய இலங்கை அணி 132 ரன்களுக்கே சுருண்டு 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அறிமுக டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வீராங்கனை ஃப்ரேயா கெம்ப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இது டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து பவுலரின் இரண்டாவது சிறந்த பவுலிங்காகும்.

Freya Kemp
Freya Kemp

மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு +4 ரன்ரேட்டுடன் முதலிடத்தை பிடித்துள்ளது இங்கிலாந்து அணி.

engw vs slw
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு.. வைரலாகும் கோலியின் பதிவு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com