eng vs indespn
கிரிக்கெட்
IndvEng: 4வது டெஸ்ட் இன்று தொடக்கம்.. தொடரைச் சமன் செய்ய இந்திய அணி முனைப்பு!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.
indiapt
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ள நிலையில், 4ஆவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்திய அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த விக்கெட் கீப்பர் பண்ட், இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவார் என கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், அன்சுல் கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா இருவரில் ஒருவர் களம் இறக்கப்படுவார்கள் என்றும் சுப்மன் கில் கூறியுள்ளார்.