‘FANSன்னா அது RCB FANS-தான்பா’ - “மற்ற அணி வீராங்கனைகள் பொறாமைப்படுகிறார்கள்” எல்லிஸ் பெர்ரி

மற்ற அணி வீராங்கனைகள் ஆர்சிபி ரசிகர்களைப் பார்த்து பொறாமைப்படுவதாக எல்லிஸ் பெர்ரி தெரிவித்துள்ளார்.
எல்லிஸ் பெர்ரி
எல்லிஸ் பெர்ரிpt web

ஐபிஎல் தொடர்கள் ஆரம்பிக்கும் போதெல்லாம் இணையத்தில் ஒருகேள்வி அதிகமாக புளங்கும். அது, ‘எந்த அணியின் ரசிகர்கள் சிறந்த ரசிகர்கள்’ என்பது..! பாரபட்சம் பார்க்காமல் சென்னை, மும்பை தொடங்கி அனைத்து அணிகளின் ரசிகர்களும் சொல்லும் பதில், RCB FANS என்பதே. இது ஒவ்வொருமுறையும் மெய்யாகும்.

கடந்த முறை WPL போட்டியில் ஸ்மிருதி தலைமையிலான பெங்களூர் அணி 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று வெளியேறியது. ஆண்கள், பெண்கள் என இருபால் ஐபிஎல் தொடரிலும் பெங்களூர் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. ஆனாலும் ஒவ்வொரு தொடரிலும் பெங்களூர் அணியின் ரசிகர்கள், ‘ஈ சாலா கப் நம்தே’ (இம்முறை கப் நமக்குத்தான்) என அதே உற்சாகத்துடன் களமிறங்குவார்கள். இதுவே அவர்களை கொண்டாடுவதற்கான காரணமாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் குஜராத்துடன் நடந்த பெண்கள் ஐபிஎல் போட்டியில் பெருவெற்றி பெற்றது பெங்களூரு அணி. இதுதொடர்பாக போட்டி முடிந்த பிறகு பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “மக்கள் கூட்டம் அவர்களுக்கும் (எதிரணி) ஆரவராம் செய்தது மிக மகிழ்ச்சி. ரேணுகா மற்றும் சோஃபியால் பந்தை ஸ்விங் செய்ய முடியும். ரேணுகா இன்ஸ்விங்கராகவும், சோஃபியா அவுட் ஸ்விங்கராகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

எல்லிஸ் பெர்ரி
WPL: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அபாரம் - 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த குஜராத் ஜெயண்ட்ஸ்

மேகனா உள்ளூர் போட்டிகள் சிலவற்றில் சிறப்பாக ஆடி இருந்தார். கடந்த போட்டியிலும் அவர் மிகச்சிறப்பாக ஆடி இருந்தார். இன்றும் கூட அவரால் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில், நிதானமாக நீண்ட இன்னிங்ஸ் ஆட முடிந்தது. எந்த மாதிரியான அணி எங்களுக்கு தேவை என்பதை முடிவு செய்ய அதிகமான வேலைகள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நடந்துள்ளது. அதற்காக அணி நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார்.

பொறாமைப்படும் எதிரணி வீராங்கனைகள்

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீராங்கனையும் ஆர்சிபி அணிக்காக ஆடுபவரான எல்லிஸ் பெர்ரி ஆர்.சி.பி இணையத்தில் தங்கள் அணியின் ரசிகர்கள் குறித்து கூறியுள்ளார். அதில், “சின்னச்சாமி மைதானத்தில் ரசிகர்களது ஆரவாரங்கள் அதிகமாக இருந்தது. அனைத்தும் எங்களை உற்சாகப்படுத்துவதற்காகத்தான். இது எங்களுக்கு மிகப்பெரிய பலம். மற்ற அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகளுடன் பேசும்போது எங்களது ரசிகர்கள் எவ்வளவு சிறந்தவர்கள் என்று அவர்கள் பொறாமைப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

எல்லிஸ் பெர்ரி, ஆர்.சி.பி அணி
எல்லிஸ் பெர்ரி, ஆர்.சி.பி அணி

முன்னதாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் இடையே நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பந்து வீசியது. பெங்களூரு அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஹேமலதா 31 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் குஜராத் 107 ரன்களை மட்டுமே சேர்த்தது. பெங்களூரு அணியில் ரேணுகா சிங் 4 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், மொலினெக்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 12.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 43 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஆட்ட நாயகியாக ரேணுகா சிங் தேர்வு செய்யப்பட்டார்.

எல்லிஸ் பெர்ரி
WPL: முதலிடத்தில் RCB... சின்னஸ்வாமி மைதானத்தில் மாறும் காட்சிகள்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com