Donald Trump supported Irans Participation in FIFA World Cup
donald trumpx page

தொடரும் பதற்றம் | திடீரென ஈரானுக்கு ஆதரவு காட்டிய ட்ரம்ப்.. உறுதிப்படுத்திய FIFA தலைவர்!

ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் பச்சைக்கொடி காட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on

ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில், ஈரான் ஒரு குழுவில் இடம் பெற்றுள்ளது. ஈரான் விளையாடும் அனைத்துப் போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெற உள்ளன. இதில் விளையாட ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஈரானும் பதிலுக்குத் தாக்கத் தொடங்கியுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. தவிர, தாக்குதல் மேலும் தீவிரமடையும் எனவும், நீண்ட நாட்கள் தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே, ஈரானை அழிப்பதே அமெரிக்காவின் வேலை என அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவில் ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாட ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் பச்சைக்கொடி காட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Donald Trump supported Irans Participation in FIFA World Cup
Iran Alja

ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில், ஈரான் ஒரு குழுவில் இடம் பெற்றுள்ளது. ஈரான் விளையாடும் அனைத்துப் போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெற உள்ளன.

Donald Trump supported Irans Participation in FIFA World Cup
ஈரான் செய்த மாபெரும் தவறு.. களமிறங்கும் பிரான்ஸ் படைகள்! ஒட்டுமொத்தமாக மாறும் களம்!

இதற்கிடையே, மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதற்றங்கள் நிலவி வரும் நிலையில், 2026 FIFA உலகக் கோப்பையில் போட்டியிட ஈரான் அமெரிக்காவிற்கு பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக FIFA தலைவர் கியானி இன்பான்டினோ தெரிவித்துள்ளார். ஈரானிய தேசிய அணி இந்தப் போட்டிக்கு வரவேற்கப்படும் என்று அமெரிக்க அதிபர் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார். .அமெரிக்க மண்ணில் திட்டமிடப்பட்ட போட்டிகளில் ஈரான் பங்கேற்க முடியுமா என்பது குறித்து அதிகரித்துவரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்த உறுதிமொழி வந்துள்ளது. முன்னதாக, தேசிய அணியுடன் இராணுவ பதற்றங்களை அதிகரித்துள்ள ஒரு நாட்டிற்கு பயணம் செய்வது நடைமுறைக்கு சாத்தியமா என ஈரானிய அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

Donald Trump supported Irans Participation in FIFA World Cup
trumpx page

ஜூன் 15ஆம் தேதி, தனது தொடக்கப்போட்டியில் நியூசிலாந்து அணியை இங்கிள்வுட்டில் எதிர்கொள்ளும் ஈரான், அடுத்து ஜூன் 21ஆம் தேதி பெல்ஜியத்தையும், ஜூன் 26ஆம் தேதி எகிப்தையும் எதிர்கொள்கிறது.

Donald Trump supported Irans Participation in FIFA World Cup
ட்ரோன்களால் தாக்கும் ஈரான்.. உக்ரைன் உதவியை நாடிய அமெரிக்கா.. கண்டிஷன் போட்ட அதிபர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com