தினேஷ் கார்த்திக் - ரவி சாஸ்திரி
தினேஷ் கார்த்திக் - ரவி சாஸ்திரிSKY Sports

TEST ஓய்வு| அன்று ரவி சாஸ்திரி சொன்ன சுளீர் வார்த்தைகள்.. இன்று முகத்துக்கு நேராக சொன்ன DK!

தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு எப்படி இருந்தது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், வலி மிகுந்த விசயத்தை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்தினார்.
Published on

முதல்தர கிரிக்கெட் மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் 40 சராசரியுடன் 40 சதங்களை அடித்திருந்தாலும், தினேஷ் கார்த்திக் என்ற வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் என்பது ஒரு ஃபுட்பாலாகவே இருந்துள்ளது.

Dinesh Karthik Debut Test
Dinesh Karthik Debut Test

தோனிக்கு முன்னதாக 2004-ல் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றபோதும், தோனிக்கு மாற்றுவீரராக அவரின் நிழலாக மட்டுமே தான் தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

தோனி சென்றபிறகும் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிதிமான் சாஹாவிற்கே டெஸ்ட் விக்கெட் கீப்பராக முன்னுரிமை வழங்கப்பட்டது. ஒருவழியாக தமிழ்நாடுக்காக ரஞ்சிக்கோப்பையில் ரன்களை குவித்த தினேஷ் கார்த்திக் 2018-ம் ஆண்டு இந்தியாவின் டெஸ்ட் அணிக்குள் நுழைந்தார்.

Dinesh Karthik Last Test Match
Dinesh Karthik Last Test Match

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு அங்கமாக இருந்த தினேஷ் கார்த்திக் 2 டெஸ்ட் போட்டிகளில் கிடைத்த வாய்ப்பு பெற்றபிறகு, 3வது போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு மாற்றுவீரராக அறிமுக போட்டியில் களமிறங்கிய ரிஷப் பண்ட், முதல் டெஸ்ட்டிலேயே சதமடித்து நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய டெஸ்ட் அணியில் சீல் செய்தார். அங்கேயே தினேஷ் கார்த்திக்கின் டெஸ்ட் வாய்ப்பு அஸ்தமனமானது.

இந்நிலையில் தன்னுடைய டெஸ்ட் முடிவு எப்படியிருந்தது குறித்து பேசியிருக்கும் தினேஷ் கார்த்திக், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொன்ன கடுமையான வார்த்தைகளை அவரை வைத்துக்கொண்டே சிரித்தபடி வெளிப்படுத்தினார்.

அடுத்த போட்டிக்கு நீ விளையாட மாட்டாய்..

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை லார்ட்ஸ் மைதானத்தில் மோதவிருக்கும் போட்டி குறித்து விவாதிப்பதற்காக, தினேஷ் கார்த்திக், நாசர் உசேன், ரவி சாஸ்திரி மற்றும் மைக்கேல் அதர்டன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பங்கு பெற்ற பாட்காஸ்ட் நடைபெற்றது.

அப்போது லார்ட்ஸ் மைதானத்தில் முடிவுக்கு வந்த தன்னுடைய டெஸ்ட் ஓய்வு குறித்து பேசிய நாசர் உசேன், இளம் வீரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அப்போதுதான் அணிக்கு வந்திருந்தார். அதனால் எனக்கு அணியில் இடம் கிடைக்காது என நினைத்த நான், என்னுடைய 4 வருட பயிற்சியாளர் டங்கன் பிளச்சரை சந்திக்க சென்றேன். அவருடைய டோரை தட்டிய நான், நாளை தான் எனக்கு கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், நாசர் நீ நன்றாக தான் விளையாடுகிறாய், பிறகு ஏன் அவ்வாறு கூறுகிறாய் என்று சொல்வார் என நினைத்தேன். ஆனால், அவர் நான் நினைத்ததற்கு மாறாக, நினைப்பதெல்லாம் வேண்டாம், நாளை தான் உனக்கு கடைசி டெஸ்ட் போட்டி என கூறிவிட்டார். உடனே நான் நன்றி என கூறிவிட்டு வந்துவிட்டேன் என பகிர்ந்து கொண்டார்.

அவரைத்தொடர்ந்து தன்னுடைய டெஸ்ட் முடிவு குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், உங்களுக்கும் எனக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் தான் டெஸ்ட் கிரிக்கெட் முடிவுக்கு வந்துள்ளது. என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை நானும் லண்டன் லார்ட்ஸில் தான் விளையாடினேன். ஆனால் ஒரே வித்தியாசம் தான், நீங்கள் பயிற்சியாளரை சந்தித்து உங்கள் ஓய்வு முடிவை கூறினீர்கள். ஆனால், என்னுடைய பயிற்சியாளர் (ரவி சாஸ்திரி) என்னை சந்தித்து அடுத்த டெஸ்ட் போட்டி குறித்து நீ யோசிக்க தேவையில்லை. இதுதான் உன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டி என கூறிவிட்டு சென்றார் என சிரித்துக்கொண்டே கூறினார்.

தினேஷ் கார்த்திக் பக்கத்தில் இருந்த ரவி சாஸ்திரி, தினேஷ் கார்த்திக் அப்படி கூறியபிறகு அவருடைய தோள்களை தட்டிக்கொடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com