தோனி, கோலி
தோனி, கோலிஎக்ஸ் தளம்

”விராட் கோலி சிறந்த என்டெர்டெய்னர்” தோனி கருத்து.. வைரலான வீடியோ !

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விராட்கோலி குறித்து தோனி பேசி இருக்கும் வீடியோ தற்போது, கிரிக்கெட் ரசிகர்களால் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Published on

பிரேம்குமார் சீ

இந்தியாவில் இந்த தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் கிரிக்கெட் வீரர்களாக மகேந்திர சிங் தோனியும், விராட் கோலியும் உள்ளனர். ஆனாலும் கிரிக்கெட்டில் இருவரும் மாறுபட்ட தன்மையுடனேயே இருந்துள்ளனர். தோனி அமைதியான வீரராக இருந்ததால் `கேப்டன் கூல்’ என அழைக்கப்பட்டார். விராட்கோலி அப்படியே முழு மாற்றாக ஆக்ரோஷமான வீரராகவே அதாவது ஆங்கிரி பேர்டாகவே இருந்துள்ளார்.

தோனி, கோலி
IND vs ENG தொடர்| ஸ்டூவர்ட் பிராட் தேர்வுசெய்த சிறந்த 11.. கில்லுக்கு இடமில்லை.. வாஷி-க்கு இடம்!

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டை விட்டு 15 ஆகஸ்ட், 2020 ஆம் ஆண்டே ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபில் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். விராட் கோலியும் சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்தும், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து வருகிறார்.

தோனி மற்றும் கோலி
தோனி மற்றும் கோலிஎக்ஸ்

ஆனாலும் இன்றளவும் சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிக பேசப்பட்டு வரும் வீரர்களாக தோனியும் கோலியும் இருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் தோனி கலந்து கொண்டார். அதில் விராட் கோலி குறித்து கேட்ட கேள்விக்கு தோனி கூறிய பதில் இணையத்தில் வைராகி விராட் கோலி ரசிகர்களையும், கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அந்த நேர்காணலில் விராட்கோலி பற்றி தோனி கூறியதாவது; "என்டர்டெயினர் விராட்கோலி சிறப்பாக பாடுவார், நன்றாக மிமிக்ரி செய்வார். விராட் கோலி சிறந்த என்டெர்டெய்னர்" என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தோனி, கோலி
இது புதுசா இருக்கே!! ஆக. 15-ல் தொடங்கும் சர்வதேச ரோபோ விளையாட்டுப் போட்டிகள்! எங்கே தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com