கிரிக்கெட் பந்துகள் மீது உமிழ் நீர்... தடையை நீக்க எழும் கோரிக்கை!
கிரிக்கெட் பந்துகள் மீது உமிழ் நீரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை, வலுக்க தொடங்கியுள்ளது.
கொரோனா காலக்கட்டத்தின்போது, பந்துகளை பளபளப்பாக்க உமிழ் நீரை பயன்படுத்துவதற்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது. இந்தநிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, உமிழ்நீரை பயன்படுத்த முடியாததால், பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார். ஆட்டத்தில் ரிவர்ஸ் ஸ்விங்கை மீண்டும் கொண்டு வர, உமிழ் நீரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தினார்
அவரது இந்த கோரிக்கைக்கு, நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சவுத்தி ஆதரவு தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 300 ரன்கள் சாதாரணமாகிவிட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஏதாவது ஒன்று இருக்க வேண்டுமென கூறியுள்ளார். அதேபோல், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிலாண்டர், ஒருநாள் போட்டிகளில் பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்துவதை சுட்டிக்காட்டி, ஷமியின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பந்து ஒரு பக்கம் பளபளப்பாக இருந்தால் மட்டுமே, ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.