சிக்சர்களால் துளைத்த டெல்லி வீராங்கனைகள்! 74ரன்கள் அடித்து தனியாளாக போராடிய மந்தனா! RCB முதல் தோல்வி

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.
dc vs rcb
dc vs rcbcricinfo

மகளிருக்கான 2024 ஐபிஎல் தொடரானது கடந்த பிப்ரவரி 23ம் தேதிமுதல் நடந்து வருகிறது. கடந்தாண்டு முதல் தொடங்கி நடைபெற்றுவரும் மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் மும்பை அணி கோப்பை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது சீசனில் கோப்பையை வெல்ல “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜியண்ட்ஸ்” முதலிய 5 அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா பந்துவீச்சை தேர்வுசெய்ய முதலில் பேட்டிங் செய்தது டெல்லி அணி.

dc vs rcb
36 வருசமாச்சு ரஞ்சிக்கோப்பை வென்று! அரையிறுதியில் மும்பை - தமிழ்நாடு மோதல்! யாருக்கு வாய்ப்பு?

சிக்சர்களால் வானவேடிக்கை காட்டிய டெல்லி!

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு எதிராக பவர்பிளே ஓவர்களை சிறப்பாக வீசிய பெங்களூர் அணி, கேப்டன் லான்னிங்கை 11 ரன்னில் வெளியேற்றி அசத்தலான தொடக்கத்தை கொடுத்தது. ஆனால் அதற்குபிறகு கைக்கோர்த்த ஷஃபாலி மற்றும் அலைஸ் கேப்சி இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஷஃபாலி ஒருபுறம் 3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 31 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்த, மறுமுனையில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என தன் பங்கிற்கு பட்டையை கிளப்பிய அலைஸ் 46 ரன்கள் அடித்து வெளியேறினார்.

shafali
shafali

ஷஃபாலி மற்றும் கேப்ஸி இருவரும் அடுத்தடுத்து வெளியேற ரன்கள் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து களத்திற்கு வந்த மரிசான் கேப், ஜோனசென் மற்றும் அருந்ததி 3 பேரும் 200க்கும் மேற்பட்ட ஸ்டிரைக்ரேட்டில் விளையாடி எல்லோரையும் மிரட்சியில் ஆழ்த்தினர். மரிசான் கேப் 3 சிக்சர்களை விளாசி 16 பந்துக்கு 32 ரன்களும், ஜோனசென் 16 பந்துக்கு 36 ரன்களும் விரட்ட 20 ஓவர் முடிவில் 194 ரன்களை குவித்தது டெல்லி அணி.

dc vs rcb
'இவர்களின் கதி அவ்வளவுதானா?'- இஷான், ஸ்ரேயாஸ் உடன் கழட்டிவிடப்பட்ட 4 மூத்த வீரர்கள்!

74 ரன்கள் அடித்து தனியாளாக போராடிய மந்தனா!

195 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ஸ்மிரிதி மந்தனா மற்றும் சோஃபி டெவின் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். முதலில் டெவினுக்கு பேட்டில் படாத நிலையில், கேப்டன் ஸ்மிரிதி சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி மிரட்டிவிட்டார். எதிர்கொண்ட 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஸ்மிரிதி மந்தனா, தன்னுடைய முதல் WPL அரைசதத்தை பதிவுசெய்து 74 ரன்கள் குவித்தார்.

mandhana
mandhana

மறுமுனையில் டெவினும் ஃபார்முக்கு திரும்ப ஆர்சிபி அணி 8 ஓவர்களுக்கு 77 ரன்களை குவித்தது. ஆனால் முக்கியமான நேரத்தில் டெவின் மற்றும் மந்தனா இருவரும் ஆட்டமிழந்து வெளியேற, களத்திற்கு வந்த ரிச்சா கோஸ் 2 சிக்சர்களை பறக்கவிட்டு நம்பிக்கையளித்தார். ஆனால் சிறிது நேரத்தில் ரிச்சாவும் வெளியேற, அடுத்தடுத்து களத்திற்கு வந்த வீரர்கள் அடித்து ஆடும் முயற்சியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினார். ஒரு பெரிய இலக்கை துரத்திய பெங்களூர் அணி முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. முடிவில் 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.

kapp

இந்தவெற்றியின் மூலம் 3 போட்டிகளில் 1 தோல்வி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி முதலிடத்தை பெற்றுள்ளது. முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடர் வெற்றிகளை பதிவுசெய்த பெங்களூர் அணி, தங்களுடைய முதல் தோல்வியை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

dc vs rcb
"Hardik-க்கு மட்டும் தனி விதிமுறையா?” இஷான், ஸ்ரேயாஸ் நீக்கம் குறித்து முன்னாள் இந்திய வீரர் கேள்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com