மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ்
மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ்cricinfo

மும்பையை புரட்டி எடுத்த ரிஸ்வி.. 90 ரன்கள் குவிப்பு.. டெல்லி அபார வெற்றி!

2026 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
Published on
Summary

2026 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பரபரப்பான வெற்றி பெற்றது. ஹர்திக் இல்லாத நிலையில் சூர்யகுமார் கேப்டனாக 51 ரன்கள், ரோகித் 35 ரன்கள் சேர்த்தும் மும்பை 162 ரன்களில் மட்டுப்பட்டது. பின்னர் பதும் நிசாங்கா 44 ரன்கள், சமீர் ரிஸ்வி 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 90 ரன்கள் குவித்து மும்பையை புரட்டி போட்டார்.

2026 ஐபிஎல் தொடர் பரபரப்பாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்டு விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 220 ரன்கள் இலக்கை சேஸ் செய்து மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரின் தொடக்கப்போட்டியில் மும்பை இந்தியன்ஸின் முதல் வெற்றியாக பதிவுசெய்யப்பட்டது.

டெல்லி கேபிடல்ஸ், 2026
டெல்லி கேபிடல்ஸ், 2026

இந்நிலையில் முதல் போட்டிக்கு பிறகு இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸை எதிர்கொண்டு விளையாடியது மும்பை இந்தியன்ஸ் அணி. இப்போட்டியில் உடல்நிலை சரியில்லாததால் ஹர்திக் பாண்டியா விளையாடாத நிலையில், டி20 உலகக்கோப்பை வென்ற சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.

மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ்
’இலங்கையை விட IPL-தான் முக்கியம்..’ நீதிமன்றம் சென்ற நட்சத்திர வீரர்! பரபரப்பு வழக்கு!

டெல்லி அபார பந்துவீச்சு..

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி தொடக்க வீரராக களமிறங்கிய ரிக்கல்டனை 9 ரன்னிலும், திலக் வர்மாவை 0 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றியது.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

18 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்தபோதிலும் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய ரோகித் சர்மா அசத்தினார். கேப்டன் சூர்யகுமார் யாதவும் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாச, ரோகித் 35 ரன்னிலும், சூர்யா 51 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்கு இழுத்துப்பிடித்து பந்துவீசிய டெல்லி பவுலர்கள் பெரிதாக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 

மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ்
இஷான் கிஷனுக்கு எதிராக கருத்து.. ”SRH கோப்பை வெல்லாது..” வன்மத்தை கக்கிய யுவராஜ் சிங்!

சமீர் ரிஸ்வி மிரட்டல் ஆட்டம்..

163 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணியில் கேஎல் ராகுல் 1 ரன்னிலும், நிதிஸ் ராணா 0 ரன்னிலும் அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக தொடங்கியது. ஒரு பக்கம் அழுத்தம் அதிகம் ஆனாலும் மறுமுனையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பதும் நிசாங்கா 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்கள் அடித்து வெளியேறினார்.

பதும் நிசாங்கா
பதும் நிசாங்கா

அதுவரையிலான சிறந்த டெல்லி பேட்ஸ்மேன் வெளியேற, இதற்கு பிறகு யார் அடிக்க போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் கடந்த போட்டியில் நாட் அவுட்டுடன் 70 ரன்கள் அடித்து ஆட்டநாயகனாக மாறிய சமீர் ரிஸ்வி, மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியிலும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

சமீர் ரிஸ்வி
சமீர் ரிஸ்வி

7 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்த ரிஸ்வி சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போது 90 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ரிஸ்வியின் அற்புதமான ஆட்டத்தால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து அசத்தியது.

மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ்
“எங்கிருந்தோ வந்த தோனி கேப்டன் ஆக்கப்பட்டார்..” - 18 வருட ஏமாற்றத்தை வெளிப்படுத்திய யுவராஜ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com