டெஸ்ட், ODI-ல் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்! இந்தியா-ஆஸி டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக புது அவதாரம்!

பாகிஸ்தானுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்PT

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வலுவான தொடக்க இணையராக இருந்தவர்கள், இடதுகை வீரர்களான மேத்யூ ஹைடன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் இருவரும். இவ்விருவர்களின் ஓய்விற்கு பிறகு அதேஅளவு வலுவான ஒரு இடதுகை தொடக்க வீரரை கண்டறிய முடியாமல் தவித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு வரப்பிரசாதமாக வந்தவர்தான் டேவிட் வார்னர். அதிரடிக்கு பெயர்போன டி20 வீரராக ஜொலித்த இவர், டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக தன்னை வளர்த்துக்கொண்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விரேந்திர சேவாக்கை வழிகாட்டியாக கொண்ட இவர், “உங்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் டெஸ்ட் கிரிக்கெட். உங்களுக்கு டி20 கிரிக்கெட்டில் 6 ஓவர்கள்தான் பவர்பிளே இருக்கும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து ஓவர்களும் உங்களுக்கு பவர்பிளேதான்” என்று கூறிய சேவாக்கின் வார்த்தைக்கு பிறகு, ஒரு ஜாம்பவான் டெஸ்ட் கிரிக்கெட்டராக மாறி அசத்தினார்.

இப்போதும் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வழிகாட்டி விரேந்திர சேவாக்தான். அதனால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாதீர்கள் என்ற கோரிக்கையை வார்னருக்கு சேவாக் வைத்துள்ளார்.

டேவிட் வார்னர்
மோசமான பிட்ச்சா? அல்லது பேட்டிங்கா?! 642 பந்திலேயே முடிவடைந்த இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டி!

டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்!

2009-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான டேவிட் வார்னர், 2011ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக காபா மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் வார்னர், 3 இரட்டை சதம், 26 சதம் மற்றும் 36 அரைசதங்களுடன் 8729 ரன்களை குவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரையில், 169 போட்டிகளில் விளையாடி 22 சதங்கள், 33 அரை சதங்களுடன் 6932 ரன்களை குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2894 ரன்களும், ஐபிஎல் கிரிக்கெட்டில் 6397 ரன்களும் குவித்துள்ளார்.

david warner
david warner

இந்நிலையில்தான் நடந்துவரும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார் டேவிட் வார்னர். பாகிஸ்தானுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் தன்னுடைய கடைசி டெஸ்ட் பதிப்பில் பங்கேற்கவுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 34 ரன்களை குவித்துள்ள அவர், சொந்த மண்ணில் கடைசி இன்னிங்ஸில் விளையாடவிருக்கிறார்.

டேவிட் வார்னர்
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்! 122 வருடங்களுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட சாதனை!

வர்ணனையாளராக அவதாரம் எடுக்கும் டேவிட் வார்னர்!

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்திருக்கும் வார்னர், டி20 போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்துள்ளார். அதேநேரம் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா நிர்வாகம் விருப்பப்பட்டால் பங்கேற்று விளையாடுவேன் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பிபிஎல், ஐபிஎல் தொடர்களில் விளையாடுவேன் என தெரிவித்திருக்கும் அவர், இந்தாண்டு இறுதியில் நடக்கவிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸில் வர்ணனையாளராக பங்கேற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

david warner
david warner

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “அடுத்தாண்டு சாம்பியன்ஸ் டிராபி வருகிறது என்பது எனக்கு தெரியும். ஒருவேளை அடுத்த 2 வருடங்களில் நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடும்பட்சத்தில், ஆஸ்திரேலியா அணிக்கு தேவைப்பட்டால் அத்தொடரில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன். அதேபோல இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக இருக்க விரும்புகிறேன். அங்கு என் கிரிக்கெட் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். தொடர்ந்து பிபிஎல் மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாட உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர்
W 0 W 0 W 0 0 W 0 W W! 6 வீரர்கள் டக்அவுட்... கடைசி 11 பந்தில் 6 விக்கெட்களை இழந்த இந்திய அணி!

3 உலகக்கோப்பை வென்ற டேவிட் வார்னர்!

david warner
david warner

2015 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர். அதேபோல 2021 டி20 உலகக்கோப்பை வென்று தொடர் நாயகனாக ஜொலித்த அவர், தன்மீதிருந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறிந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது நடந்துமுடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பையிலும் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு பெரிய பங்காற்றினார்.

டேவிட் வார்னர்
உங்களுக்கு டெண்டுல்கர்.. எங்களுக்கு டீன் எல்கர்! - கடைசி போட்டியில் எமோசனல் நோட்ஸ் உடன் வந்த ரசிகர்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com