\
india test team
india test teamweb

15 வருடத்திற்கு பின் முதல்முறை.. ஆப்கானிஸ்தான்-இந்தியா டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவம்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடிவருகிறது.
Published on
Summary

நியூ சண்டிகரில் தொடங்கிய ஆப்கானிஸ்தான்-இந்தியா டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இளம் இடதுகை ஸ்பின்னர் மனவ் சுதர் டெஸ்ட் அறிமுகம் பெற்றார்; குல்தீப் யாதவ் கேப் வழங்கினார். வாஷிங்டன் சுந்தர், மனவ் சுதர், குல்தீப் ஆகிய மூன்று ஸ்பின்னர்களுடன், சிராஜ், பிரசித் வேகப்பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. சுப்மன் கில் தலைமையிலான ஒருநாள் அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் இடம்பெற்றுள்ளனர். அதேபோல இஷான் கிஷன் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

manav suthar
manav suthar

டெஸ்ட் அணியை பொறுத்தவரையில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனவ் சுதர், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே போன்ற வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற நிலையில், இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடதுகை சுழற்பந்துவீச்சாலர் மனவ் சுதர் டெஸ்ட் அணியின் அறிமுகத்தை பெற்றுள்ளார். குல்தீப் யாதவ் அவருக்கு இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்பை ஒப்படைத்தார்.

india test team
இது இந்திய அணியா? GT அணியா? கில் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு.. கொதித்தெழுந்த ரசிகர்கள்!

15 வருடத்தில் முதல்முறை..

நியூ சண்டிகரில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். அணியில் எதிர்ப்பார்த்த 11 வீரர்களில் புதியதாக வந்த மனவ் சுதருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர், மனவ் சுதர், குல்தீப் யாதவ் என 3 ஸ்பின்னர்களும் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா என 2 வேகப்பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர்.

15 வருடத்தில் முதல்முறையாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா என இரண்டு வீரர்களும் இல்லாமல் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பிறகு 69 டெஸ்ட் போட்டிகளில் இருவரில் ஒருவர் இடம்பிடித்திருந்தனர்.

அதேபோல 2021ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஸ்பெசலிஸ்ட் ஸ்பின்னராக மனவ் சுதர் இந்திய அணியில் இடம்பெறுகிறார்.

இந்தியா (பிளேயிங் லெவன்): கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், சுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த்(கீப்பர்), துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், மனவ் சுதர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

india test team
20 வயதில் முதல் இந்தியராக வரலாறு.. பிரக்ஞானந்தா படைத்த மாபெரும் சாதனை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com