\
சிஎஸ்கே, இஷான் கிஷன்
சிஎஸ்கே, இஷான் கிஷன்csk / ipl / x

SRH-ஐ அசுரபலமாக்கிய சிஎஸ்கே டிரேட்.. 2027 கோப்பை அவர்களுக்கு தானா? CSK ரசிகர்கள் அதிருப்தி!

ஏற்கனவே பேட்டிங்கில் மிரட்டிவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பந்துவீச்சிலும் பலமாக்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிரேட். இதற்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Published on: 
Summary

சிஎஸ்கே அணியின் புதிய டிரேட் மூலம் ஹைதராபாத் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசுரபலத்தை பெற்றுள்ளது. லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோரின் சேர்க்கை அணிக்கு பலம் சேர்த்தாலும், சிஎஸ்கேவின் முக்கிய வீரர்களை வெளியேற்றியதால் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2023ஆம் ஆண்டு கோப்பை வென்றதற்கு பிறகு 2024, 25, 26 என அடுத்தடுத்த 3 சீசன்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியாக செல்லவில்லை. பல குறைகள், பல குழப்பங்கள், சொந்த மைதானத்தில் படுதோல்விகள் என எல்லாமே இறங்குமுகமாகவே சென்றது. இந்தசூழலில் தான் 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முந்தைய பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் மொத்தமாக வெளியேற்றப்பட்டு, புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தசூழலில் புதிய அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சென்னை அணி, ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியிடமிருந்து வாங்க திட்டமிட்டுவருவதாக சொல்லப்பட்டது. அவர் அணிக்குள் வந்தால் சிஎஸ்கேவின் பலம் அதிகரிக்கும் சூழல் இருந்தநிலையில், மும்பை அணி கடைசிவரை அவரை வெளியேவிட அனுமதிக்கவில்லை.

சிஎஸ்கே, 2026
சிஎஸ்கே, 2026csk

இந்நிலையில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமிருந்து லியாம் லிவிங்ஸ்டன், ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகிய 2 பேரை வாங்கியுள்ளது. அவர்களுக்கு பதிலாக இடது கை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அகமது மற்றும் ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லீஸ் இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிஎஸ்கேவின் இந்த நகர்வு தான் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அணியில் டெவால்ட் பிரேவிஸ், ஜேமி ஓவர்டன், அகீல் ஹொசைன், நூர் அகமது, மேத்யூ ஷார்ட் போன்ற தவிர்க்கமுடியாத வெளிநாட்டு வீரர்கள் இருக்கும் நிலையில், மேலும் 2 வெளிநாட்டு வீரர்களை எடுத்து எப்படி அணிக்குள் பொறுத்துவீர்கள் என்ற கேள்வியை முன்வைத்துவருகின்றனர். லியாம் லிவிங்ஸ்டன் சிறந்த வீரர் தான் என்றாலும், அவரிடம் கன்ஸிஸ்டன்ஸி இல்லை என்பதும் விமர்சனமாக வைக்கப்பட்டுவருகிறது.

மறுபக்கம் சிஎஸ்கே விட்டுக்கொடுத்த வீரர்களால் ஹைத்ராபாத் அணி பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சுலும் அசுரபலத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், சலில் அரோரா, நிதிஷ்குமார் ரெட்டி என அதிரடி வீரர்கள் இருக்கும் நிலையில், தற்போது பந்துவீச்சிலும் பாட் கம்மின்ஸ், கலீல் அகமது, நாதன் எல்லீஸ், நடராஜன், பிரஃபுல் ஹிங்கே என பலம்பெற்றுள்ளது. இது அந்த அணி கோப்பை வெல்லக்கூடிய வாய்ப்பை இன்னும் பலமடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது.

பொதுவாக ஒரு டிரேட் நடக்கும்போது இரண்டு அணிகளும் பலம்பெறும்வகையில் அமையவேண்டியது முக்கியமாக பார்க்கப்படும் நிலையில், சிஎஸ்கே முக்கியமான வீரர்களை வெளியேற்றியதோடு பிளேயிங் 11-ல் நேரடியாக சேர்க்கமுடியாத வீரர்களையும் எடுத்து பின்தங்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

சிஎஸ்கே, இஷான் கிஷன்
சொந்த நாட்டிலேயே அவமரியாதை.. ஓய்வை அறிவித்த ஜாம்பவான் ரொனால்டோ! உலகம் பார்க்காத கதை!