CSK MS Dhoni Injury Scare Ahead of IPL 2026?
தோனிweb

வலியால் கடும் அவதி.. தோனியின் பரிதாப நிலை? கவலையில் ரசிகர்கள்.. #ViralVideo | #CSK | #Dhoni

நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் களம் காண இருக்கும் சென்னை அணியின் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படும் 44 வயதான தோனியும் களத்தில் இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சமீபத்தில் நடைபெற்ற வலைப்பயிற்சியின்போது அவர், தனது காலில் ஏற்பட்ட வலியால் மைதானத்தில் மிகவும் சிரமப்பட்டு நடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.

நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், மறுபுறம் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரும் 10 அணிகளிடம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 10 அணிகளும் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே சில அணி வீரர்கள், போட்டி தொடங்குவதற்கு முன்பே காயத்தால் விலகியிருப்பது, அவ்வணிகளுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் களம் காண இருக்கும் சென்னை அணியின் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படும் 44 வயதான தோனியும் களத்தில் இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CSK MS Dhoni Injury Scare Ahead of IPL 2026?
MS Dhonix page

ஆனால், அவர் சமீபத்தில் நடைபெற்ற வலைப்பயிற்சியின்போது தனது காலில் ஏற்பட்ட வலியால் மைதானத்தில் மிகவும் சிரமப்பட்டு நடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. சமீபகாலமாகவே கால் வலியால் அவதிப்பட்டு வரும் தோனி, வலைப்பயிற்சியை முடித்துவிட்டு பெவிலியன் திரும்பியபோது தனது வழக்கமான சுறுசுறுப்புடன் இல்லை என்பதும், அவர் தனது 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லை என்பதும் அந்த வீடியோவில் அப்பட்டமாகத் தெரிகிறது.

CSK MS Dhoni Injury Scare Ahead of IPL 2026?
தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஜெர்சி No.7-ஐ மாற்றும் DHONI.. இதுதான் காரணமா..?

அவரது இந்த நிலையைக் கண்ட சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். தவிர, இந்த வீடியோவால், அவரது உடற்தகுதி குறித்த கவலைகள் மீண்டும் எழுந்துள்ளன. 2023 முதல் முழங்கால் பிரச்னையால் தோனி அவதிப்பட்டு வருகிறார். எனினும், அந்த ஆண்டு அவர் ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்று கொடுத்த பிறகு, முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆயினும், இந்த முழங்கால் பிரச்னை இன்னும் தீரவில்லை. இதனால் அவரது பேட்டிங்கும் பாதித்துள்ளது. அவரால் விரைவாக ஒற்றை மற்றும் இரட்டை ஓட்டங்களை எடுக்க முடியவில்லை.

மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேட் செய்ய முடிகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஐபிஎல் தொடரின் தொடக்கம் முதலே விளையாடி வரும் தோனி, அத்தொடர் வரலாற்றின் மிக மூத்த மற்றும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இந்த நிலையில் அவர் வலியுடனும், அதேநேரத்தில் சோர்வுடனும் நடப்பதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சமீபத்திய சீசன்களில் அவரது ஓய்வு குறித்த வதந்திகள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வரும் நிலையில், இந்த வீடியோ ரசிகர்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது. அவர், ஓய்வு பெற வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CSK MS Dhoni Injury Scare Ahead of IPL 2026?
நான் தான் அடுத்த ஜடேஜாவா..? தோனி சொன்ன முதல் அட்வைஸ்.. 20 வயது பிரசாந்த் வீர் ஓபன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com