CSK CEO says on MS Dhoni will play full IPL 2026 season
தோனிweb

”2026 சீசனில் தோனி விளையாடுவார்.. ஆனால்” - ட்விஸ்ட் வைத்த CSK சிஇஓ!

வரும் ஐபிஎல் 2026 சீசனின் அனைத்துப் போட்டிகளிலும் தோனி பங்கேற்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
Published on

2026 ஐபிஎல் தொடரானது மார்ச் 28ஆம் தேதி தொடங்கப்பட்டு இறுதிப்போட்டியானது மே 31ஆம் தேதி நடத்தப்படும் என கிறிக்இன்ஃபோ தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து அணிகளும் ஏற்கெனவே தங்கள் பயிற்சி முகாம்களைத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில், ஐபிஎல் 2026 சீசனின் அனைத்துப் போட்டிகளிலும் தோனி பங்கேற்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

2026 ஐபிஎல் தொடரானது மார்ச் 28ஆம் தேதி தொடங்கப்பட்டு இறுதிப்போட்டியானது மே 31ஆம் தேதி நடத்தப்படும் என கிறிக்இன்ஃபோ தகவல் வெளியிட்டுள்ளது. இது ஐபிஎல் நிர்வாகம் முன்னர் அறிவித்த மார்ச் 26 தொடக்க தேதியை விட 2 நாட்கள் தாமதமான அறிவிப்பாகும். எனினும், 5 மாநில தேர்தல்கள் மற்றும் ஆர்சிபியின் ஹோம் கிரவுண்டு குறித்து அட்டவணை இறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், அனைத்து அணிகளும் ஏற்கெனவே தங்கள் பயிற்சி முகாம்களைத் தொடங்கிவிட்டன. சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பையில் விளையாடிய வீரர்கள் விரைவில் தங்கள் அணிகளுடன் இணைந்து, வரவிருக்கும் தொடருக்கான பயிற்சியைத் தொடங்க உள்ளனர்.

தோனி
தோனிபிசிசிஐ

இந்த நிலையில், வரும் ஐபிஎல் 2026 சீசனின் அனைத்துப் போட்டிகளிலும் தோனி பங்கேற்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

CSK CEO says on MS Dhoni will play full IPL 2026 season
“அது அவுட் இல்ல.. அமைதியா இரு” - வைரலாகும் தோனி & சாக்ஷி கியூட் வீடியோ!

இதுகுறித்து அவர், “ஐபிஎல் 2026 சீசனின் அனைத்துப் போட்டிகளிலும் தோனி பங்கேற்பார். அதேநேரத்தில் அவர், அவர் ஒரு பேட்ஸ்மேனாக அல்லது ஒரு விக்கெட் கீப்பர்-பேட்டராக அல்லது ஒரு இம்பாக்ட் பிளேயராக விளையாடுவாரா என்பதை அணி நிர்வாகமே இறுதி முடிவெடுக்கும். நாங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, பிசிசிஐ அட்டவணையை அறிவிப்பதற்காகக் காத்திருக்கிறோம். இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது மகிழ்ச்சி. சிஎஸ்கே வீரர்கள் சஞ்சு மற்றும் சிவம் தூபே இருவரும் சிறப்பாகச் செயல்பட்டதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது சிஎஸ்கே அணிக்கு இங்கே சிறப்பாகச் செயல்பட அதிக நம்பிக்கையை அளிக்கிறது. சிஎஸ்கே பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வீரர்கள் உற்சாகமாகப் பயிற்சி செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

ms dhoni files for trademark of iconic nickname captain cool
தோனிpt

சிஎஸ்கே அணியில் இருந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவர் தோனியின் பாரத்தைக் குறைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

CSK CEO says on MS Dhoni will play full IPL 2026 season
2026 IPL | தோனி விளையாடுவாரா? CSK நிர்வாகம் சொல்வதென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com