ashwin - vijay
ashwin - vijayweb

“இளம் தலைமுறையினர் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்” - விஜய்க்கு கிரிக்கெட்டர் அஸ்வின் வாழ்த்து

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Published on
Summary

தமிழக அரசியலில் திமுக-அதிமுக இருமுனைப் போட்டியை உடைத்து, தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 35% வாக்குகளை பெற்று வரலாற்று வெற்றி கண்டுள்ளார். இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உருவாக்கிய இந்த அலைக்கு நடுவே, இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜனநாயகத்தின் பலத்தையும், மக்களின் தீர்ப்பையும் வலியுறுத்தி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலை பொறுத்தவரை இருபெரும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேயான இருமுனைப் போட்டியே இருந்துவந்த நிலையில், நடிகர் விஜயின் வருகையால் இந்த முறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை தமிழகம் கண்டுள்ளது.

Vijay
Vijayweb

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, விஜய் ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தன. ஆனால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இளைஞர்களின் செல்வாக்கும் இந்தத் தேர்தல்களில் விஜயை ஒரு கணிக்க முடியாத சக்தியாக மாற்றி மாபெரும் வெற்றிக்கு அழைத்துச்சென்றுள்ளது.

இந்தசூழலில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளையும் பின்னுக்குதள்ளியிருக்கும் தவெக கிட்டத்தட்ட 35% சதவீத வாக்குகளை பதிவுசெய்து வரலாறு படைத்துள்ளது.

ashwin - vijay
”வரலாறு படைத்துவிட்டீர்கள்..” விக்ரம் முதல் சிவகார்த்திகேயன் வரை விஜய்க்கு வாழ்த்து!

இந்நிலையில் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர், “வெற்றியாளரை வாழ்த்த நான் யார்? மக்கள் ஏற்கனவே அதைச் செய்துவிட்டார்கள். இதுதான் ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம்.

ஒரு ஜனநாயகத்தில், முடிவெடுக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. இந்த முறை, வாக்குப்பதிவு மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. பலபேர் வெளிநாடுகளில் இருந்துவந்து வாக்கு செலுத்தியதை நான் முதல்முதலாக பார்த்தேன். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த ஒரு உண்மையான வாய்ப்பு, மேலும் ஒரு புதிய தலைமை உருவாகவிருக்கிறது. இளம் தலைமுறையினரும் மக்களும் அவரிடம் ஒரு மாபெரும் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். தவெக தலைவர் விஜய்க்கும், அக்கட்சிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

ashwin - vijay
”முதல்வர் ஸ்டாலின் தோல்வி மனதை பிசைகிறது..” - மாரி செல்வராஜ்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com