\
Sanju Samson vs Klaasen Clash
Sanju Samson vs Klaasen Clashweb

யார் மீது தவறு..? சரமாரியாக திட்டிக்கொண்ட சஞ்சு சாம்சன்-கிளாசன்! இணையத்தில் வெடித்த விவாதம்!

நேற்றைய சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஹென்ரிக் கிளாசன் இடையேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
Published on
Summary

சென்னை சேப்பாக்கில் நடந்த சிஎஸ்கே–சன்ரைசர்ஸ் போட்டியில், இஷான் கிஷன், கிளாசன் ஆட்டத்தால் சென்னை அதிர்ச்சி தோல்வி கண்டது. இதனால் SRH, குஜராத் டைட்டன்ஸ் பிளேஆஃப் இடம் உறுதி செய்தன. 15வது ஓவரில் சஞ்சு சாம்சன் மின்னல் ஸ்டம்பிங் மூலம் கிளாசனை அவுட் செய்த தருணத்தில் இருவரும் திட்டிய வீடியோ வைரலாகி, ரசிகர்கள் இரு தரப்பாகப் பிளவுபட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணிக்கு ஷாக் கொடுத்து SRH அணி வெற்றியை தட்டிச்சென்றது. இதனால் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பிளேஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தன. சென்னை அணிக்கு பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் தோற்றால் மட்டுமே ஒரு வாய்ப்பு இருக்கிறது.

இந்தசூழலில் நேற்று நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் கிளாசன் இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருபக்கம் நிலைத்து நின்று அதிரடி காட்டிய இஷான் கிஷனின் 70 ரன்கள் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தாலும், மறுமுனையில் குறைந்த பந்தில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என மிரட்டிய கிளாசன் ஆட்டமே சிஎஸ்கேவின் கையிலிருந்த போட்டியை SRH பக்கம் கொண்டு சென்றது.

இந்நிலையில் கிளாசனை 15ஆவது ஓவரில் ஒரு மின்னல்வேக ஸ்டம்பிங் மூலம் அவுட்டாக்கினார் சஞ்சு சாம்சன். அப்போது கிளாசன் அவுட்டாகி செல்லும்போது சஞ்சு சாம்சனை திட்டியது தெரிந்தது. இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு தரப்பினர் சஞ்சு சாம்சன் மீதுதான் தப்பு என்று சொன்னாலும், மற்றொரு தரப்பினர் சஞ்சு சாம்சனுக்கு முன்னதாகவே கிளாசன் அவரை திட்டியதாக கருத்திட்டு வருகின்றனர்.

Sanju Samson vs Klaasen Clash
CSK தோல்வியால் பிளேஆஃப் சென்ற GT, SRH.. கடைசி இடத்திற்கு 5 அணிகள் போட்டி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com