‘நடுஇரவில் எழுப்பி கேட்டாலும் உங்களால் மறக்க முடியாத தருணம் எது?’ - உணர்ச்சிவசப்பட்ட ரவிசாஸ்திரி!

இந்திய முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டரான ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்தது பிசிசிஐ.
ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரிX

இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் ஆல்ரவுண்டரகாவும், இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராகவும், தலைமை பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளராகவும் பல்வேறு பரிமாணங்களில் ஜொலித்தார் ஒரு ஜாம்பவான். அவர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி. இந்திய அணியின் வளர்ச்சியில் ஒரு பில்லராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் அவர்.

இந்தியாவுக்காக 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 சதங்கள் உட்பட 6938 ரன்கள் குவித்து, 280 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கும் ரவிசாஸ்திரி, இந்திய அணி 1983 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 1985 சாம்பியன்ஸ் டிரோபி கோப்பைகளை வெல்லும் போது ஒரு அங்கமாக இருந்தார்.

61 வயதிலும் இந்திய அணிக்காக பல்வேறு நிலைமைகளில் தன்னுடைய பங்களிப்பை அளித்துவரும் ரவிசாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுவழங்கி பிசிசிஐ கௌரவித்தது.
BCCI Award Function
BCCI Award Function

ஹைத்ராபாத்தில் நடைபெற்ற பிசிசிஐ விருதுவழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான சிகே நாயுடு விருது, இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டரான ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் வழங்கப்பட்ட மிகச்சிறந்த கௌரவத்தை பெற்றுக்கொண்ட ரவிசாஸ்திரியிடம், தொகுப்பாளராக இருந்த ஹர்சா போக்ளே அவருடைய 40 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து சிறந்த தருணத்தை தேர்ந்தெடுக்குமாறு கூறினார்.

இரவில் எழுப்பி கேட்டாலும் உங்கள் மனதில் இருக்கும் மிகச்சிறந்த கிரிக்கெட் தருணம் எது?

வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக்கொண்ட ரவி சாஸ்திரியிடம், “உங்களுடைய 40 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் நீங்கள் நிறைய சிறந்த தருணங்களை கண்டிருப்பீர்கள். ஆனால் உங்களிடம் நடுஇரவில் தூக்கத்திலிருந்து எழுப்பி 2 மணிக்கு கேட்டாலும், ‘வாவ் அந்த தருணத்தை மறக்கவே முடியாது’ என சொல்லக்கூடிய ஒரு சிறந்த தருணம் என்றால் அது என்னவாக இருக்கும்?” என்ற கேள்வியை ஹர்சா போக்ளே எழுப்பினார்.

ஹர்சா போக்ளே
ஹர்சா போக்ளே

அதற்கு பதிலளித்து பேசிய ரவி சாஸ்திரி, “ஒரு தருணத்தை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். நான் சிறந்த ஒவ்வொரு தருணத்தையும் கூறுகிறேன்.

- 1985-ல் நாங்கள் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் தோற்கடித்தோம்.

- அதேபோல 1983-ல் உலகக் கோப்பையை வென்றோம், வெஸ்ட் இண்டீஸில் சதமடித்தது

- ஆஸ்திரேலியாவில் இரட்டை சதமடித்தது மிகப்பெரிய தருணம்.

- 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் MS தோனி அந்த வெற்றி சிக்ஸரை அடித்தபோது வர்ணனை பெட்டியில் இருந்தது

- 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிபெற்றது....

- ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து இரண்டு தொடர்களை வென்றோம்

இது எல்லாமே சிறப்பு வாய்ந்தது. இப்படி பல சிறந்த தருணங்கள் இருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும்தான் எனக்கு மிகச்சிறந்த தருணமாக இப்போது வரை இருக்கிறது. அது என்னவெனில், ஆஸ்திரேலியாவின் கப்பா மைதானத்தில் ரிஷப் பண்ட் அடித்த வெற்றி ரன்கள்” என்று கூறி அதுகுறித்து உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

கப்பா டெஸ்ட் வெற்றிகுறித்து உணர்ச்சிவசப்பட்ட ரவி சாஸ்திரி, “ஆஸ்திரேலியாவின் கோட்டையான கப்பா மைதானத்தில் ரிஷப் பண்ட், அந்த வெற்றிக்கான கடைசி ரன்களை அடித்தபோது, கேக் மீது ஐஸ் வைத்தது போல ஒரு உணர்வு இருந்தது. என் வாழ்நாளில் அதைவிட சிறந்த மெடல் வேறெதுவும் கிடையாது” என எமோசனலாக பேசினார்.

Rishabh Pant Gabba Test
Rishabh Pant Gabba Test

கப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா முதலிய ஸ்டார் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. இந்தியா கப்பாவில் நிச்சயமாக தோற்கும் எனவும், ஒரு போட்டியை கூட இந்தியாவால் வெல்ல முடியாது எனவும் சொல்லப்பட்ட நேரத்தில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தொடரை கைப்பற்றியது மட்டுமல்லாமல், ஒருமுறை கூட வெல்லாத கப்பா மைதானத்தில் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது.

கப்பா வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் “இந்தியர்களை எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com