\
shafali verma
shafali vermabcci

8.5 ஓவரில் 104 ரன்கள் சேஸ்.. ஜிம்பாப்வேவுக்கு மரண அடி கொடுத்த இந்தியா!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்திய மகளிர் அணி.
Published on: 
Summary

ஜிம்பாப்வே மகளிர் அணியுடன் நடந்த 2வது டி20 போட்டியில் இந்தியா 8.5 ஓவரில் இலக்கை எட்டியது. ஷபாலி வெர்மா 55 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 47 ரன்களும் அடித்து அசத்தினர். தொடரை 2-0 என வென்ற இந்தியா, 3வது போட்டியில் வெற்றியை உறுதிசெய்ய முயற்சிக்கிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஜிம்பாப்வே மகளிர் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் முழுநேர கேப்டனாக ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட்டார். ஆனால் கேப்டனாக விளையாடிய முதல் போட்டியையே மறக்கமுடியாத போட்டியாக மாற்றியது ஜிம்பாப்வே மகளிர் அணி. 19 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தபிறகு போராடி வென்றது இந்தியா.

இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் மட்டுமே அடித்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 8.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. தொடக்க வீரர்களாக விளையாடிய ஷபாலி வெர்மா 55 ரன்களும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 47 ரன்களும் அடித்து அசத்தினர்.

3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றுள்ள இந்திய அணி, 3வது டி20 போட்டியில் நாளை விளையாடுகிறது.

shafali verma
மரண பயம்காட்டிய ஜிம்பாப்வே.. கேப்டனாக முதல் போட்டியே இப்படியா? புலம்பி தள்ளிய மந்தனா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com